விஜய் பற்றி முதல் முறையாக பேசிய நடிகை அதிதி ஷங்கர் – என்ன இப்படி சொல்லிட்டாரு..

aditi-shankar
aditi-shankar

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு தற்போது சினிமாவில் கால் தடம் பதித்துள்ளார். முதல் படமே கார்த்தி நடிப்பில் அண்மையில் உருவாகி வெளிவந்த விருமன் திரைப்படத்தில் கிராமத்து ரோலில் நடித்து அசத்தி உள்ளார்.

முதல் படத்திலேயே நடிப்பு பாட்டு டான்ஸ் என பல திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார்.  விருமன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றன. மேலும் இந்த படத்தில் அதிதி ஷங்கரின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்படுகின்றன. அதுபோக படமும் ஒவ்வொரு நாளும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதனால் அண்மையில் விருமன் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் அதிதி ஷங்கர், கார்த்தி, சூர்யா மற்றும் பலரும் கலந்து கொண்டனர். சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகைகளாக இருக்கும் பலரும் முதலில் கிராமத்து ரோலில் நடித்து தற்போது தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தி உள்ளனர். அது போல் விருமன் படம் மூலம் என்ட்ரி ஆகிய அதிதி சங்கர்.

அதற்குள் இரண்டாவது படமான சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதிதி சங்கருக்கு அதற்குள்ளேயே அதிக ரசிகர்கள் பட்டாளமும் உருவாகத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து அதிதி சங்கர் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

அப்படி ஒரு பேட்டியில் பேசும்போது விஜய்யுடன் நடிப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அதிதி சங்கர் விஜய் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் மேலும் அவருடன் நடனம் ஆடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார். இதை கேட்ட விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.