பிரபல இயக்குனர் சங்கரின் மகளாக சினிமாவிற்கு அறிமுகமான அதிதி சங்கர் தொடர்ந்து விதவிதமான உடையில் ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர் தான் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் மேலும் இவருடைய புகைப்படங்களுக்கு ரசிகர்களும் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறார்கள்.
டாக்டர் படிப்பை முடித்துவிட்டு பிறகு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் எதிர்பாராத விதமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் எனவே இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பிறகு இவருக்கு நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது முத்தையா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கிராமத்து கதைய அம்சம் கொண்ட படம் என்றாலும் தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையினால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
இவ்வாறு இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தினை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோ அஸ்வின் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தினை சாந்தி டாக்ஸ் நிறுவனம் தயாரிக்க சமீப காலங்களாக படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் அந்த படப்பிடிப்பில் விரைவில் அதிதி ஷங்கர் கலந்துக் கொள்ள இருக்கிறார். பிறகு அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்க இருக்கும் படத்தில் அடுத்ததாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் விஷ்ணுவர்தன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் திரைப்படங்களை இயக்க இருக்கிறார்.
இவ்வாறு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வரும் அதிதி சங்கர் தொடர்ந்து தன்னுடைய அழகிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். எங்கு பார்த்தாலும் இவருடைய புகைப்படங்கள் என்ற அளவிற்கு இருந்து வருகிறது இதோ அவருடைய அழகிய புகைப்படங்கள்.