நடிகை அதிதி சங்கர் நடிகர் அஜித் பட இயக்குனருடன் கைகோர்த்துருக்கும் நிலையில் அந்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்ற பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த படத்தில் கதாநாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்த வருவதாகவும் சமீப காலங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் சங்கரின் மகள் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமான நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
அந்த வகையில் விஷ்ணுவர்தன் தற்பொழுது இயக்கி வரும் படத்தில் நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி ஹீரோவாக நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தான் கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்த வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தினை விஜயின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரித்து வருவதாகவும் சென்னை ஈசிஆர் பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் எனவும் மேலும் இந்தப் படத்தில் நடித்தவரும் நட்சத்திரங்கள் கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது குறித்து கூடுதல் விவரம் என்னவென்றால் நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஆகாஷ் முரளி தன்னுடைய மாமனார் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்த வருகிறார்.