பொதுவாக ஒரு சில நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. அந்த வகையில் முன்னணி நடிகையாக ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்த அபிராமி தற்பொழுது சில வருடங்களுக்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இவர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதுமட்டுமல்லாமல் இவரின் சினிமா வாழ்க்கைக்கு இத்திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அது மட்டுமல்லாமல் திரைப்படத்திற்குப் பிறகு இவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எதிர்பாராத விதமாக திருமணம் செய்து கொண்டு சினிமா பக்கம் தலை காட்டாமல் செட்டிலாகிவிட்டார்.
இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பிரபலமடைந்தார்.
தற்பொழுது வெளிவந்த சுல்தான், மாறா உள்ளிட்ட திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து இருந்தார். இந்நிலையில் தற்போது இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
அவ்வபொழுது அந்நிகழ்ச்சியில் மிகவும் மாடர்ன் உடையில் பார்த்தவுடன் பத்திக்கும் அளவிற்கு கவர்ச்சியான உடையில் வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். அவ்வப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.