தமிழ் சினிமாவில் வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அபிராமி. பின்னர் அதனைத் தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், தோஸ்த், சார்லி சாப்ளின் போன்ற பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
பின்னர் தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். மேலும் இவர் கமலஹாசனுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பு இந்த திரைப்படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு சினிமாவில் பல வாய்ப்புகள் குவிந்தாலும் இவர் சினிமாவில் பெரிய அளவில் விருப்பமில்லாததால் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் .
பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து ரீ-என்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் சார்லி சாப்ளின் 2 போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் இவர் மலையாள திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் பேசப்படுகிறது.
இந்த நிலையில் இவர் தற்போது டைட்டான டி ஷர்ட் அணிந்து கிச்சனில் சமைப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்து வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பழைய நடிகைகள் தான் இன்னும் அப்படியே அழகு குறையாமல் இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் பழைய நடிகர் நடிகைகள் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்கதாக உள்ளது எனவும் கூறுகின்றனர். இதோ அந்த புகைப்படம்.