லெக்கின்ஸ் மீது மாடனாக புடவை..! இணையத்தில் ரசிகர்களின் கமெண்டுக்கு ஊறுகாயான அபர்ணா பாலமுரளி..!

abarna-balamurali
abarna-balamurali

actress abarna balamurali latest photos in modern saree: மலையாள சினிமாவில் மிக பிரபலமான நடிகையாவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தவர் தான் நடிகை அபர்ணா பாலமுரளி இவர் தமிழில் முதன்முதலாக 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகில் முகம் காட்ட ஆரம்பித்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சர்வம் தாள மயம் என்ற திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல்  பல திரைப்படங்களில் பின்னணி பாடகியாகவும் பணியாற்றியுள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட நமது நடிகை திருச்செந்தூர் பகுதியில் தான் வசித்து வருகிறார்.

இவருக்கு சிறுவயதிலேயே இசையில் ஆர்வம் வருவதற்கு காரணம் அவருடைய தந்தைதான் ஏனெனில் அவருடைய தந்தை ஒரு இசை இயக்குனர் ஆவார். அதேபோல அவருடைய தாயும் ஒரு சிறந்த பின்னணிப் பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு திரைப்படத்தில் பின்னணி பாடகியாக வலம் வருவது மட்டுமல்லாமல் பரதநாட்டியம் மோகினி ஆட்டம் குச்சுபுடி என பல்வேறு நடன திறமைகளை தனக்குள் வைத்திருக்கும் அபர்ணா பாலமுரளி சமீபத்தில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு  நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

அந்த வகையில் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் கூட இவர் கதாநாயகியாக நடித்துள்ளார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்று பல்வேறு விருதுகளையும் வாங்க வழி வகுத்துள்ளது.

பார்ப்பதற்கு கொலுக்கு முழுக்கு என இருக்கும் நமது நடிகை சூரரை போற்று திரைப்படத்தில்  புடவை மட்டும் அணிந்து கொண்டு நடித்து இருப்பார் இவ்வாறு புடவையிலேயே தன்னுடைய அழகை தமிழ் சினிமாவில் காட்டிய நமது நடிகை முதன்முதலாக மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி உள்ளார்.

abarna-balamurali
abarna-balamurali

அந்த வகையில் லெக்கின்ஸ்மீது மாடர்னாக புடவை அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் ரசிகர்களின் கமெண்டுக்கு ஊறுகாயாக ஆகி வருகிறது.

abarna-balamurali
abarna-balamurali
abarna-balamurali
abarna-balamurali