பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த சியான் விக்ரமுக்கு மறைமுகமாக உதவி செய்த அஜித்.. பல வருட சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

vikram
vikram

நடிகர் அஜித் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். அதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர்களில் ஒருவர் ஆவார். மேலும் சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப நல்லவர் தனது குடும்பத்தை சிறப்பாக பார்த்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் அவரை தேடி உதவி என்று வருபவருக்கு தன்னால் முடிந்த சில உதவிகளை மறைமுகமாக செய்து வருகிறார்.

இவர் சினிமாவில் எந்த ஒரு சிபாரிசும் இல்லாமல் தன்னந்தனியாக முன்னுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னால் முடிந்த உதவிகளை சினிமா பிரபலங்கள் மற்றும் மக்கள் என பலருக்கும் செய்து வருகிறார். அப்படி அஜித் ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் விக்ரமுக்கு ஒரு மிகப்பெரிய உதவி செய்துள்ளார். அது குறித்து விலாவரியாக பார்ப்போம்..

நடிகர் விக்ரம் முதலில் மலையாளத்தில் ஓரிரு படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பது மற்றும் நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்தார். பின்பு ஒரு கட்டத்தில் தமிழில் ஹீரோவாக சில படங்களில் நடித்து வந்தார் ஆனால் அந்த படங்கள் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை தோல்வியையே சந்தித்தனர்.

ஒரு கட்டத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த சேது திரைப்படம் அவரது வாழ்க்கையில் திருப்பு முனை படமாக அமைந்தது. இந்த படம் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது ஆனால் அதன் பிறகு அவருக்கு ஏற்பட்ட கார் விபத்து சினிமா வாழ்க்கையை முடக்கியது. பின்பு உடல்நிலை சரியாகி விக்ரம் நடிக்க தொடங்கிய முதல் திரைப்படம் உல்லாசம்.

இந்த படத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக அஜித் மற்றும் மகேஸ்வரி நடித்திருந்தனர். இவர்களைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் ரகுவரன் மற்றும் விக்ரம் நடித்திருந்தனர். இந்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் எவ்வளவு முக்கியமோ அதேபோல விக்ரமின் கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வாய்ப்பை விக்ரமுக்கு அஜித்தான் ஏற்படுத்திக் கொடுத்துள்ளாராம்.

இதைக் கண்டு விக்ரம் அப்போது பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார். மேலும் அப்போதே அஜித் இப்படி ஒருசிறந்த குணம் கொண்டவர்.தன்னலம் பார்க்காமல் சக நடிகர்களுக்கு இப்படி உதவி செய்துள்ளார். அதன் பிறகு விக்ரமுக்கு அதிக பட வாய்ப்புகளும் குவிந்தன. என பிரபல யூட்யூப் சேனல் நேர்காணல் ஒன்றில் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்