தமிழ் சினிமாவில் அதிக ஹிட் படங்களை கொடுத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இதுவரை 168 திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது அடுத்த படமான ஜெயிலர் படத்திலும் நடிக்க இருக்கிறார். இப்படி ரஜினி ஓடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் ரஜினி நடித்த படங்களின் பெயர்கள் மீண்டும் வைக்கப்பட்டு படங்கள் எடுக்கப்படுகின்றன
அந்த வகையில் இதுவரை ரஜினி நடித்த படங்களின் பெயரை மீண்டும் வைத்து வெளியான திரைப்படங்கள் என்னென்ன, அதில் எந்த படம் பெரிய வெற்றி பெற்றது என்பது குறித்து தற்பொழுது பார்ப்போம். 1. பில்லா : ரஜினி நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பில்லா இந்த படம் மீண்டும் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது இந்த படத்திற்கு பில்லா என மீண்டும் டைட்டில் வைக்கப்பட்டு அஜித் நடித்து படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
2. ரஜினியின் மருமகன் தனுஷ் ரஜினி பட டைட்டிலை பல தடவை பயன்படுத்தி உள்ளார் அந்த வகையில் பொல்லாதவன், தங்கமகன் படிக்காதவன் என ரஜினி பட தலைப்பை தனுஷ் வைத்து நடித்து வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 3. ரஜினி நடித்த ஆக்சன் திரைப்படம் நான் மகான் அல்ல.. இந்த படத்தின் டைட்டிலை வைத்து கார்த்தி நடித்தார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படம் ஆக இருந்தது படம் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
4. ரஜினி நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் நான் சிகப்பு மனிதன் இந்த படத்தின் டைட்டில் விஷால் வைத்து நடித்தார் இந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தனர் ஆனால் வெற்றியைப் பெற தவறியது. 5. ரஜினி நடித்த மனிதன் படத்தின் டைட்டிலை வைத்து உதயநிதி ஸ்டாலின் நடித்தார். இந்த படம் உதயநிதிக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
6. ரஜினி நடித்த ஆக்சன் படமான கழுகு படத்தின் டைட்டிலை வைத்து நடிகர் கிருஷ்ணா நடித்திருந்தார், ரஜினியின் படத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக பார்க்கப்பட்ட தீ படத்தின் டைட்டிலை சுந்தர் சி பயன்படுத்தி நடித்தார், அதேபோல ரஜினியின் தில்லுமுல்லு படத்தின் டைட்டிலை சிவா பயன்படுத்தினார் இப்பொழுது கூட ரஜினி சிவாஜி நடித்த விடுதலை படத்தின் டைட்டிலை வெற்றிமாறன் தனது படத்திற்கு வைத்து எடுத்து வருகிறார் அந்த படத்தில் விஜய் சேதுபதி சூரி போன்றவர்கள் நடிக்கின்றனர்.