உயிரை விட்டு படத்தை வெற்றி பெற செய்த “நடிகர்கள்” – லிஸ்ட்டில் இத்தனை திரைப்படங்களா.!

Paruthiveeran
Paruthiveeran

காதல் மற்றும் ரொமாண்டிக் படங்களில் ஹீரோ ஹீரோயின்கள் சேர்ந்தது போல் கிளைமாக்ஸ் காட்சியில் காண்பித்தால் ரசிகர்களுக்கு ஒரு மன திருப்தியை கொடுக்கும்.. ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் நடிகைகள் இறந்தது போல் காண்பித்தால் ரசிகர்களுக்கு திருப்தி தராது .. இந்த நிலையில் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர், நடிகை இறந்து வெற்றிகண்ட படங்களை பற்றி பார்க்க இருக்கிறோம்..

பருத்திவீரன் : 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடிப்பில் உருவானது இந்த திரைப்படம் படத்தில் கார்த்தி வேலைக்கு போகாமல் குடித்துக்கொண்டு வருபவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பார். ஆனால் பிரியாமணி இவரை காதலிப்பார் ஒரு கடட்டத்தில் இருவரும் சேர்ந்து காதலித்துக் கொண்டிருப்பவர்கள்.

ஒரு கும்பல் வந்து பிரியாமணியை கெடுத்து விடுவார்கள் மேலும் அவருக்கு மண்டையில் அடிபட்டு விடும் இந்த விஷயம் ஊருக்கு தெரிந்தால் கெட்ட பெயர் ஆகிவிடும் என தெரிந்து பிரியாமணி தன்னை கொலை பண்ண சொல்லுவார் கார்த்தியும் கத்தியால் வெட்டி கொன்று விடுவார், கடைசியில் கார்த்தியை பிரியாமணியின் அப்பா கும்பல் கொள்ளுவார்கள் ஆனால் படம் வெளிவந்து சக்கபோடு போட்டது.

எங்கேயும் எப்பொழுதும்  : இந்த படம் முழுக்க முழுக்க காதல் சம்பந்தப்பட்ட படமாக எம் சரவணன் எடுத்திருந்தார் 2011 ஆம் ஆண்டுவெளிவந்து நன்றாக ஓடியது. படத்தில் ஜெய் –  அஞ்சலி, ஷர்வானந்து – அனன்யா நடித்திருப்பார்கள் சிறப்பாக திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஜெய் இறந்து விடுவார். ஆனால் படம் ஓடி ஹிட் அடித்தது.

நாயகன் : கமலஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் மற்றவர்களுக்கு உதவி செய்வது போல் தான் படம் இருக்கும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமலை துப்பாக்கியால் சுட்டு விடுவார்கள் ஆனால் படம் அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

மைனா : பிரபு சாலமன் இயக்கத்தில் 2019 வெளியான இந்த திரைப்படத்தில் விதார்த், அமலா பால்,  தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருப்பார். சித்தார்த்தை போலீஸ் கைது செய்துவிடும் அமலா பால் கூடவே வந்து விடுவார் .  இவருடைய  காதலைப் பார்த்து போலீஸ் இறக்கப்பட்டு விடுவார்கள் ஆனால் கடைசி நேரத்தில் மைனாவை செத்துவிடுவார் இதைப் பார்த்த விதார்த்  ரயிலில் அடிபட்டு அவரும் இறந்து விடுவார்.

ரமணா : விஜயகாந்த் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் படம் தான் லஞ்சம் வாங்கும் ஊழல்வாதிகளை ஒவ்வொருவராக தேடிப் பிடித்து கொள்வார் ஆனால் விஜயகாந்த் கடைசியாக  மாட்டிவிடுவார்  வேறு வழி இல்லாமல் மரண தண்டனை ஏற்று கொள்வார்.

சுப்பிரமணியபுரம் : சசிகுமார் இயக்கிய நடித்த இந்த திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளியானது படத்தில் அவருடன் இணைந்து ஜெய், கஞ்சா கருப்பு, சுவாதி, சமுத்திரகனி என பலர் நடித்திருந்தனர் இந்த படம் முழுக்க முழுக்க நட்பு மற்றும் காதலை பற்றி எடுத்துரைக்கும் ஒரு படமாக இருந்தது. கடைசியில் சசிகுமார் கொல்லப்படுவார்.  படம் மாபெரும் வெற்றி பெற்றது.