தமிழ் சினிமா பொருத்தவரை முன்னணி நடிகை விட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் தொடர்ந்து இவர்கள் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஏராளமான நடிகைகள் தங்களுடைய முதல் சீரியலிலே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் உள்ளார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் சீரியல் நடிகை என்பதால் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால் என்னை நிராகரித்து விட்டார்கள் என்று கூறிய பேட்டி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை வாணி போஜன்.
இவர் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மேலும் சின்னத்திரை நயன்தாரா என்றும் கூறி வந்தார்கள்.பிறகு ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து டிரிபிள்ஸ் என்ற சீரியலில் நடித்திருந்தார் மேலும் அதன் பிறகு தற்போது அருண் விஜய்வுடன் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணைந்து நடித்துள்ளார் மேலும் இந்த வெப் சீரியல் நேற்று வெளியானது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரியலில் நடிப்பதற்காக சில பேட்டிகளில் கலந்து கொண்ட இவர் சினிமாவில் இவர் பட்ட கஷ்டங்களைப் பற்றி கூறியுள்ளார். அதாவது இவர் சீரியலில் நடித்த விட்டு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை தேடும் பொழுது இயக்குனர்கள் இவருக்கு ஓகே சொன்னாலும் நடிகர்கள் சீரியல் நடிகை வேண்டாம் என தவிர்த்தார்களாம்.
மேலும் இதனைப் பற்றி கவலைப்படாமல் நான் நடித்திருந்த சீரியலில் முடித்துவிட்டு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை தேடி வந்தேன் அந்த நேரத்தில் ஓ மை கடவுளே படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. என இவர் கூறிய நிலையில் சீரியல் நடிகைகள் என்றால் பலரும் இப்படி கேவலமாக நினைத்து வருகிறார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.