தமிழ் திரைப்படங்களில் அமைந்துள்ள தந்தை கதாபாத்திரங்கள் எந்த அளவிற்கு வில்லனாக நடித்துள்ளார்கள் அவர்கள் யார் யார் என்று தான் தற்போது இந்த பட்டியலில் பார்க்க வருகிறோம்.
பிரகாஷ் ராஜ் :- சமீபத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜா அவர்கள் கார்த்திக் அவர்களுக்கு தந்தையாக நடித்திருப்பார் இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால். தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள போராட்டம் தந்தை தனது மகனை எப்படியாவது அழிக்க வேண்டும் என நினைக்கிறார். அதேபோல் தந்தையை நல்ல வழிப்படுத்த போராடும் மகன் போராடுகிறார் அதன் பின்னர் அப்பாகவை நல்வழி படுத்தினார இல்லையா என்பதே படத்தின் கதை. இந்த திரைப்படத்தில் மிகவும் மோசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.
நாசர் :- இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் பரத், நாசர், வடிவேலு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் எம் மகன். இந்த திரைப்படம் தான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மகனுக்கு தெரிய வேண்டும் என நினைத்து பல வழிகளில் மகனை துன்புறுத்துகிறார் அப்பாவின் கண்டிப்பில் வளர்ந்த மகன் எப்படி வெளியேறினார் பின்னர் மகனுக்கு அப்பாவிற்கும் இடையே உள்ள உறவு என்ன ஆச்சு என்பதே இந்த படத்தின் கதையாகும்.
சமுத்திரகனி :- சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டான். இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி ஆரம்பத்தில் இருந்தே தன் மகனை கண்டிப்போடு வளர்த்து வருவார் ஆனால் கடைசியில்தான் அவர் எவ்வளவு பெரிய நல்ல தந்தை என்று தெரியும். இதை பார்த்த ரசிகர்களும் மனம் உருகினார்கள் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி அவர்கள் சிறப்பான உழைப்பை போட்டு உள்ளார்.
சத்யராஜ்:- மிஸ்டர் பாரத் படத்தில் நடிகர் சத்யராஜ் அவர்கள் ஒரு பெண்ணை ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அதன் பிறகு சென்னையில் ஒரு பெரிய தொழிலதிபராக உலா வந்து கொண்டிருக்கிறார். அதே சமயம் சத்யராஜ் ஏமாற்றிய பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது அவர்தான் நடிகர் ரஜினிகாந்த். மேலும் ரஜினிகாந்த் அவர்கள் தன் தாயை இந்த நிலைமைக்கு தள்ளிய சத்தியராஜை பழிவாங்க வெறும் அதே சமையம் தன்னுடைய தாய்க்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடுவது இப்படத்தின் கதையாகும். இந்த படம் முழுவதும் எலியும் புனையுமாக மகன் தந்தை கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும்.
பிரகாஷ்ராஜ் :- netflix ottல் வெளியான திரைப்படம் பாவ கதைகள் இந்த திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தான் பாசத்தோடு தூக்கி வளர்த்த பெண் வேற்று ஜாதியில் உள்ள நபரை காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். அதன் பிறகு தன் மகளின் இந்த செயலுக்கு நல் வார்த்தைகளை பேசி மகளை தன் இல்லத்திற்கு அழைத்து வந்து அவரை ஆணவக் கொலை செய்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். இந்தத் திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆகும் இந்த படத்தில் நடித்துள்ள பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.