தற்போது சினிமாவைப் பொறுத்தவரை இணையதள செயலின் மூலம் ஈசியாக வாய்ப்பு கிடைக்கிறது. முன்பெல்லாம் அப்படி கிடையாது சினிமா வாய்ப்பிற்காக பலர் தன் வாழ்க்கையை தொலைத்ததும் உண்டு ஒரு சிலர் சரியாக பயன்படுத்திக் கொண்டவரும் உள்ளனர். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வாய்ப்பு கிடைத்து வெள்ளித் தலைக்கு காவிய நடிகர்களை பற்றி தான் திருப்புவது நாம் பார்க்க இருக்கிறோம்.
சிவகார்த்திகேயன் :- தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பின்னர் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.
சமுத்திரகனி :- தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டு விளங்கி வருகிறார் நடிகர் சமுத்திரகனி. இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரமணி மெஸ் ரமணி என்ற நகைச்சுவை தொடரில் துணை இயக்குனராக அறிமுகமானார் அதன் பின்னர் ஈசன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
சந்தானம் :- ஆரம்பத்தில் காமெடி நடிகனாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார் அதன் பிறகு தற்போது ஹீரோவாக நடித்து கொண்டு வருகிறார். இவர் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற நகைச்சுவை தொடரில் அறிமுகமானார். பின்னர் சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக வெள்ளி திரையில் அறிமுகமானார்.
ரியோ ராஜ் :- சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமான ரியோ ராஜ் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். அதன் பின்னர் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
ஸ்ரீ :- விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்து பிரபலமானார் பின்னர் பட்டாளம் என்ற திரைப்படத்தில் நடித்து வெள்ளி திரையில் அறிமுகமானார்.
கவின்:- விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கவின் பின்னர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்துள்ளார். அதன் பிறகு நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகியுள்ளார்.
கார்த்திக் :- இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொடரில் நடித்து பிரபலமானார். பின்னர் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை என்ற திரைப்படத்தில் நடித்து வெள்ளி திரையில் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.
பிரஜின் :- விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இது ஒரு காதல் கதை என்ற சீரியலில் நடித்து பிரபலமானார். பின்னர் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இர்ஃபான் :- விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் இர்ஃபான். அதன் பின்னர் சுண்டாட்டம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
விஷ்ணு குமார் :- விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலில் நடித்து பிரபலமான விஷ்ணுகுமார் வெள்ளி திரையில் மாப்பில சிங்கம், இவன் யார் என்று தெரிகிறதா, ஆகிய திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமாகியுள்ளார்.