சினிமா துறையினரை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பினை 1976 ஆம் ஆண்டு இந்திய தேசிய அரசு தொடங்கியது.இந்திய திரைப்படங்களில் சில சிறந்த நட்சத்திரங்களை தேர்ந்தெடுத்த இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் கௌரவிற்கப்படுகின்றனர். இதுவரை தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற நடிகர்களை பற்றி பின்வருமாறு பட்டியலிடப்படுகிறது.
1. எம்ஜிஆர் ராமச்சந்திரன்
1990 காலகட்டங்களில் மிகவும் பிரபலமடைந்த நடிகர்களில் ஒருவர் எம்ஜிஆர் ராமச்சந்திரன். இவரது 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இதனைத்தொடர்ந்து 25 ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் களில் ஒருவர் எம்ஜிஆர் ராமச்சந்திரன். இவர் 1971 ஆம் ஆண்டு இவர் நடித்து வெளிவந்த ரிக்சாக்காரன் படம். பெரிய வெற்றிப் படமாக மாறியது மட்டுமல்லாமல் அகில இந்திய சிறந்த நடிகருக்கான பாரத் என்னும் தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. இப்படம் சுமார் தியேட்டர்களில் 150 நாட்களுக்கு மேல் தாண்டி ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரை உலகில் முதன் முதலில் தேசிய விருது பெற்ற நடிகர் என்ற பெயரையும் இவரே தக்க வைத்துள்ளார்.
2. கமலஹாசன்
நடிப்பிற்கு பேர் போனவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் கமலஹாசன். சிறுவயதிலிருந்தே தனது நடிப்பு திறமையை மெருகேற்றி வந்தவர். இவர் பல இயக்குனர்களிலன் கீழ் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து இருந்தாலும், இவரே இயக்கி நடித்து மிகப்பெரிய வெற்றி படங்களை கண்டவர் அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் விருமாண்டி விஸ்வரூபம் விஸ்வரூபம் 2 ஹேராம் போன்றவையாகும். இவரை உலகநாயகன் மற்றும் நடிப்பின் மறுபக்கம் என மக்கள் கூறுவதற்கு ஒரு காரணமும் உண்டு ஏனென்றால் 1982 ஆம் ஆண்டு மூன்றாம் பிறையை படத்திற்காகவும், ஆயிரத்து 1987 இல் நாயகன் படத்திற்காகவும் மற்றும் 1996 ஆம் ஆண்டு இந்தியன் படத்திற்காகவும் ஆகிய மூன்று படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதனால் இவருக்கு இம்முறை தேசிய விருது வழங்கப்பட்டது. இதனாலேயே மக்கள் இவரை இவ்வாறு கூப்பிடுகிறார்கள். இதுவரை இந்திய சினிமாவில் யாரும் நிகழ்த்தாத பல சாதனைகளை படைத்தவர் நடிகர் கமலஹாசன்.
3.விக்ரம்
தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்தபடியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர் நடிகர் விக்ரம். இவர் நடித்து 2003 ஆம் ஆண்டு வெளிவந்த பிதாமகன் திரைப்படத்திற்காக தேசிய விருது வழங்கினார். இத்திரைப்படத்தின் மூலம் நடிப்பு மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது அதுமட்டுமல்லாமல் முன்னணி நடிகராகவும். இவர் வித்தியாசமான கதைக்களத்தை ஏற்று நடிப்பதில் வல்லமை பேட்றவர். இவரது நடிப்பின் மூலம் பல ரசிகர்களைக் கட்டிப் போட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. பிரகாஷ் ராஜ்
சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரகாஷ் ராஜ். திரைப்படங்களில் எந்தவிதமான ரோலாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்து பெரும் பங்காற்றி வருகிறார். இவர் 2007 ஆம் ஆண்டு நடித்து வெளிவந்த படம் காஞ்சிவரம். இப்படம் மக்கள் மத்தியில் இன்றுவரை பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்படம் விமர்சன ரீதியாக பெற்ற படம். இப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரு கதை நடிப்பதற்கு பலர் தயங்குவார்கள் எந்தவித கதையாக இருந்தாலும் எந்தவித ரோலாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்யும் தன்மை கொண்ட சிலர் களில் ஒருவர் பிரகாஷ் ராஜ் அவர்கள் இதனாலேயே அவர் பல
மொழிகளில் இன்றுவரை நின்று கொண்டிருக்கிறார் என ஊடகங்கள் மற்றும் பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
5.தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இப்படத்தை அண்ணன் செல்வராகவன் அவர்கள் இயற்றினார். தொடர்ந்து காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டவர் தனுஷ். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை அவர் கொடுத்து வந்தாலும் 2010ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் கைகோர்த்து நடித்து வெளிவந்த படம் ஆடுகளம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு இல்லாமல் விமர்சன ரீதியாகவும் மற்றும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன்மூலம் தனுஷ் அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது.
இவர்கள் மட்டுமே தேசிய விருதை பெற்று உள்ளனர்.