தோல்வி கொடுத்து துவண்டு கிடந்த இயக்குனர்களை பட வாய்ப்பு கொடுத்து தூக்கிவிட்ட நடிகர்கள்.!

tamil-actor

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனர் கடைசி திரைப்படம் தோல்வியை சந்தித்தால் நடிகர்களும் சரி தயாரிப்பாளரும் சரி அந்த இயக்குனருக்கு மறுபடியும் இன்னொரு வாய்ப்பு கொடுக்க அச்சப்படுகிறார்கள். ஆனால் அதையும் தாண்டி ஒரு பெரிய தோல்வி கொடுத்த இயக்குனருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்த நடிகர்களை பற்றி தான்  தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

லிங்குசாமிக்கு 2014ல் வந்த அஞ்சான் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது அஞ்சானுக்கு அடுத்து லிங்குசாமிக்கு நான்கு வருஷத்திற்கு வேற எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. அதன் பிறகு விஷால் அவர்கள் சண்டக்கோழி 2 திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமிக்கு வாய்ப்பு கொடுத்தார்.ஏன் அவருக்குவிஷால் வாய்ப்பு கொடுத்தார் என்றால் சண்டக்கோழி 1 மற்றும் அதற்கு முன்பு நிறைய வெற்றிப் படங்களைக் கொடுத்ததனால் அஞ்சான் என்ற பெரிய தோல்வி படத்தை  கொடுத்த பின்பும் விஷால் அவர்கள் சண்டக்கோழி 2 படத்தின் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார்.

vishal
vishal

ஜனநாதனுக்கு 2015 ஆம் ஆண்டு வந்த புறம்போக்கு என்கிற பொதுவுடமை பாக்ஸ் ஆபீஸில் ஒரு மிகப்பெரிய தோல்வி திரைப்படம். அந்தப் படத்திற்கு பிறகு ஜனநாதன் நான்கு வருடத்திற்கு எந்தவொரு திரைப்படத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு ஜனநாதன் விஜய் சேதுபதி நடிப்பில் லாபம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

vijay sethupathi

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் நம்ம தனுஷ் விஐபி 2 வில் சௌந்தர்யாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். விஐபி 1 வேலை செய்த டெக்னீசியன் விஐபி 2 வில் யாரும் வேலை செய்யவில்லை.

dhanush

கௌதம் மேனன் என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு முன்பே நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் என்ற இரண்டு திரைப்படங்களையும் தோல்வி திரைப்படமாக கொடுத்திருந்தார். இருந்தாலும் தல அஜித் கௌதம் மேனனுக்கு வாய்ப்பு கொடுக்க காரணம் ஏற்கனவே அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு என்ற மிகப்பெரிய வெற்றி படங்களால்  அதனால்தான் அஜித் அவர்கள் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்திற்கு வாய்ப்பு கொடுத்தார்.

ajith

அஞ்சான் மாதிரியே அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட திரைப்படம் தான் அலெக்ஸ் பாண்டியன், அந்த அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவி சகலகலா வல்லவன் என்ற திரைப்படத்திற்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பை சரியாக சுவராஜ்  பயன்படுத்தவில்லை. மறுபடியும் விஷால் கத்தி சண்டை திரைப்படத்தில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தார். அந்த திரைப்படத்தின் வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தவில்லை.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 2017 இல் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய தோல்வியானது, அந்தப் படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறிவந்தனர். தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் தொடர்ச்சியாக இரண்டு படங்கள் இயக்கி வருகிறார், ஒன்று பிரபுதேவாவின் பஹீரா, ஜிவி பிரகாஷின் காதலியை தேடி நித்தியானந்தா,

செல்வராகவனுக்கு 2013ல் வெளியான இரண்டாம் உலகம்  பாக்ஸ் ஆபீஸில் பெரிய தோல்வியைத் தேடித் தந்தது. அங்கு தோல்விக்குப் பிறகு நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படமும் வெளியாகவில்லை, அந்த மாதிரியான தருணத்தில் சூர்யா அவர்கள் செல்வராகவனுக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் அந்த திரைப்படம் தான் என் ஜி கே.

surya

சுசீந்திரன் ஜாம்பியன், கென்னடி கிளப், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற இவர் இயக்கிய வரிசையான திரைப்படங்கள் எதுவும் பாக்ஸ் ஆபீஸில் பெரிய அளவிற்கு சொல்லிக்கொள்ள வாய்ப்பில்லை. அந்த மாதிரியான ஒரு தருணத்தில்தான் சிம்புவும் சுசீந்திரனும் இணைந்து ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளனர். சுசீந்திரனை பொருத்தவரைக்கும் ஒரு திரைப்படத்தை மிக விரைவில் முடித்துவிடுவார். ஈஸ்வரன் ஒரு குடும்பத் திரைப்படம் இதனால் தான் சிம்பு சுசீந்திரனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்.

பரதன் இயக்கத்தில் 2007 இல் வெளியான அழகிய தமிழ் மகன் என்ற திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அந்த பரதனுக்கு பத்து வருடம் கழித்து தளபதி மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுத்தார்.

ஏ ஆர் முருகதாஸ் சர்க்காருக்கு முன்பே ஸ்பைடர், அகிர், என்ற இரண்டு தோல்வி படங்களை கொடுத்துள்ளார் இருந்தாலும் இதற்கு முன்பு ஆர் முருகதாஸ் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்ததால்  நடிகர் விஜய் சர்க்கார் திரைப்படத்தில் முருகதாசுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். அதற்கு காரணம் துப்பாக்கி, கத்தி இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

vijay

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் 2017 இல் வந்த விவேகம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய தோல்வியானது. இந்த திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு சில அப்படி இப்படியான விஷயங்களெல்லாம் வெளியானது. இருந்தாலும் மறுபடியும் சிவாவுக்கு தல வாய்ப்பு கொடுத்தார். அஜித் விசுவாசம் திரைப்படத்திற்கு அவர் ஒரு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் தற்போது ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் ஒரு திரைப்படம் இவருக்கு கிடைத்திருக்காது.