ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என திரிஷாவை காதலித்து கழட்டி விட்ட நடிகர்கள்.! அதனால்தான் திருமணம் வேண்டாம் என கூறுகிறாரா.?

trisha
trisha

நடிகை திரிஷா அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க இதுதான் காரணம் என அனைத்து காரணத்தையும் புட்டு புட்டு வைத்துள்ளார் சினிமா பிரபலம் ஒருவர். இதனால் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்த திரிஷா இடையில் சரியான பட வாய்ப்பு இல்லாமல் அமைதியாக இருந்தார் அதுமட்டும் இல்லாமல் அவர் நடிக்கும் படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து மொத்த மார்க்கெட்டையும் ஈசி ஆக பிடித்துக் கொண்டார்.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். 14 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி நடிகை திரிஷா அவர்கள் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு என்ன காரணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் பிரபலம் ஒருவர் தனது youtube சேனலில் நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்ளாதது இதுதான் காரணம் என விலாவாரியாக கூறி இருக்கிறார்.

அதாவது நடிகை திரிஷா அவர்கள் ஆரம்பத்தில் நடிகர் சிம்புவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து தெலுங்கில் பிரபலமாக ஆரம்பித்த திரிஷா அங்கு நடிகர் ராணாவுடன் நெருங்கி பழகி வந்தாராம் அது மட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே தான் செல்வார்களாம்.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது ஆனால் இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை அந்த ஜோடி உடனே பிரிந்து விட்டது இதற்கு ராணாதான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. அது மட்டுமல்லாமல் நடிகை திரிஷாவை உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார் நடிகர் ரானா என்று பைல்வான் ரங்கநாதன் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிஷா சோசியல் மீடியாவில் சில நண்பர்கள் தன்னை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று மறைமுகமான ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். அது மட்டுமல்லாமல் வீட்டில் பார்க்கும் வரன்களையும் தட்டி கழித்து வந்தார் நடிகை திரிஷா. இப்படி வெறுப்பில் இருந்த நடிகை திரிஷா கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது படங்கள் இவருக்கு குவிந்து கொண்டே வருகிறது.