Sarathkumar : சினிமா உலகில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் ஆரம்பத்திலிருந்து கடைசி வரையிலும் ஹீரோவாகவே நடித்து ஓடிவிடுவார்கள் ஆனால் காமெடியன்கள், வில்லன்கள் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் இவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால் ஹீரோவாக நடித்து விடுவார்கள்.
அப்படி தான் நாகேஷ், வடிவேலு போன்ற காமெடி நடிகர்கள் ஹீரோவாகவும் நடித்து வெற்றி கண்டார்கள் இவர்களைப் போலவே வில்லன் நடிகர்களும் ஹீரோவாக நடித்தது தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்துள்ளனர் அப்படிப்பட்ட நடிகர்கள் குறித்து பார்ப்போம்.. இந்த லிஸ்டில் முதலாவதாக இருப்பவர் நடிகர் சத்யராஜ் ஆரம்பத்தில் இவர் ஆரம்பத்தில் வில்லன்கங்களுக்கு அடியாளாக இருந்து எஸ் பாஸ், ஓகே பாஸ் என சொல்லி நடித்தார்.
அதன் பிறகு தனது திறமையின் மூலம் முழு வில்லனாக மாறினார் இப்படி ஓடிக் கொண்டிருந்த சத்யராஜுக்கு கடலோர கவிதை படம் பெரிய வரவேற்பு பெற்று தந்தது அதன் பிறகு நல்ல நல்ல படங்களில் நடித்து ஹீரோவாக தன்னை தக்க வைத்துக் கொண்டார் தற்பொழுது வயது முதலிரவின் காரணமாக டாப் ஹீரோ படங்களில் அப்பா, சித்தப்பா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் சரத்குமார் ஆரம்பத்தில் பட விநியோஸ்தவராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார் ஒரு கட்டத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதில் கைதட்டல் வாங்கினார். தொடர்ந்து வில்லனாக நடித்து வந்த இவருக்கு திடீரென ஹீரோ வாய்ப்பு கிடைத்தது அதன் பிறகு நாட்டாமை, ரகசிய போலீஸ் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக மாற்றி வெற்றி கண்டார்.
இப்பொழுதும் கூட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஓடிக்கொண்டு இருக்கிறார். நடிகர் ஆனந்தராஜ் நாம் இவரை அதிகமாக வில்லனாக நடித்து தான் பார்த்திருக்கிறோம் ஆனால் இவரும் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
ஆனால் இவர் நடித்த படங்கள் பெருமளவு வெற்றி பெற்றதில்லை இதனால் இவருக்கு ஒரு கட்டத்தில் வில்லன் வாய்ப்புகளை வந்தது அதிலையும் தனது முழு திறமையும் காட்டி நடித்ததால் இன்று வரையிலுமே பல்வேறு நடிகர்களும் படங்களில் வில்லனாகவும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.