பொது இடமென்று கூட பார்க்காமல் கதறி அழுத முன்னனி நடிகர்கள்!! பதறவைக்கும் சம்பவங்கள் இதோ..

all actors
all actors

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் தன்னையே அறியாமல் பொது இடங்களில் அழுதுள்ளார்கள். அதில் சில நடிகர்கள் ரசிகர்களுக்காக, சில நடிகர்கள் சொந்த பிரச்சனைக்காக, சில நடிகர்கள் படத்தின் பிரச்சனைக்காக கண்ணீர்விட்டு பொது இடங்களில் அழுதுள்ளர்கள்.

தளபதி விஜய் :பொதுவாக தளபதி விஜய் படத்தில் நடிக்கும் எமோஷனலை விட நிஜ வாழ்க்கையில் மிகவும் எமோஷனலானவர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். அந்தவகையில் இவரின் ரசிகர் ஒருவர் எதிர்பாராதவிதமாக இறந்ததால் இறந்தவரின் வீட்டிற்கு சென்று தன்னையே அறியாமல் கண்கலங்கிய உள்ளார்.

அடுத்ததாக தலைவா படம் ரிலீஸ்சாக வில்லை என்பதற்காக ஒரு ரசிகர் இறந்துள்ளார். தளபதியிடம் தொகுப்பாளர் ஒருவர் பேட்டியில் தலைவா திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு பல  எதிர்ப்புகள் இருந்தது. அதில் உங்களுக்கு எது மிகவும் கஷ்டத்தை அளித்தது என்று கேட்டதற்கு தளபதி ரசிகன் ஒருவர் இறந்தது தான் எனக்கு மிகவும் வேதனையை அளித்தது என்று கூறியிருந்தார்.

vijay (2)
vijay (2)

 

சிவகார்த்திகேயன் : நடிகர் சிவகார்த்திகேயன் தனது விடாமுயற்சியால் சினிமாவில் உயர்ந்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தொடர்ந்து சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்ததால் இவருக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இடையில் இவருக்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர் சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு வந்ததால் தயாரிப்பாளருக்கு கண்டிஷன் போட்டிருந்தார். எனவே சில தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயனை டார்ச்சர் செய்துள்ளார்கள்.

சிவகார்த்திகேயன் ஆடியோ வெளியீட்டு விழாவில் எனக்கு எத்தனை பிரச்சினை கொடுத்துள்ளீர்கள் நானும் மனுஷன் தான் என்று கூறி அனைவர் முன்னிலையிலும் அழுதுள்ளார்.

sivakarthi
sivakarthi

விஜயகாந்த்: நடிகர் விஜயகாந்த் எமோஷனல், சண்டை போடுவது போன்றவற்றில் சிறந்த நடிகர் என்பது நாம் அறிந்த ஒன்று தான். இவர்  அரசியல்வாதியாகவும் தன் கால் தடத்தைப் வைத்துள்ளார். இந்நிலையில் இவர் வெளிநாட்டிற்கு சென்று இருந்த பொழுது கலைஞர் இறந்ததை அறிந்து வீடியோ கால் போட்டு கதறி அழுதுள்ளார்.

அருண் விஜய்: அருண் விஜய் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால் எந்த படமும் சொல்லும் அளவிற்கு வெற்றியை தரவில்லை. பிறகு அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படம் சிறந்த வில்லத்தனத்தை காட்டி அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். என்னை அறிந்தால் திரைப்படம் ரிலீசாகும் பொழுது அனைவர் முன்னிலையிலும் அழுதுள்ளார்.

ராகவா லாரன்ஸ் : திரைப்பட இயக்குனர், ஹீரோ,டான்ஸ் மாஸ்டர் போன்ற பன்முகத் தன்மைகளை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போலீசார்கள் பல ரசிகர்களை அடித்ததால் அனைவர் முன்னிலையிலும் ரசிகர்களுக்காக அழுதார்.

உரியடி ஹீரோ : இப்படத்தை இயக்குனர் விஜயகுமார் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்காக பல கஷ்டங்களை சந்தித்து உள்ளதாக கூறி இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனைவர் முன்னிலையிலும் அழுதார்.

டி ராஜேந்திரன் : இவர் தன் இளைய மகன் திருமணத்தின் போது இவர் தன் இளைய மகனின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று செய்தி வைரலானது.ஆனால் பத்திரிக்கையாளர்களை சந்தித்த டி ராஜேந்திரன் நான் ஏன் என் மகனின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கண் கலங்கி அழுதார்.