Tamil Actress: சினிமாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது அவரவர்களுடைய விருப்பம் ஏராளமான பிரபலங்கள் இரண்டு, மூன்று திருமணம் செய்து கொண்டவர்கள் இருக்கின்றனர். மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பிலும் இருந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் விவாகரத்து பெற்றவர்களை திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் குறித்து பார்க்கலாம்.
ஆதிக் ரவிச்சந்திரன்: இளம் இயக்குனரான இவர் தமிழ் சினிமாவில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தார். சமீபத்தில் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக் கொண்டார். இதுதான் ஆத்விக்கு முதல் திருமணமாக இருந்தாலும் ஐஸ்வர்யாவிற்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. 2009ஆம் ஆண்டு தனது சொந்த அத்தை பையன் குணால் என்பவரை திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
ரெடின் கிங்ஸ்லி: டாக்டர் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த ரெடின் சமீபத்தில் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். ரெடின் கிங்ஸ்லிக்கு 46 வயது ஆனாலும் இது தான் முதல் திருமணம் ஆனால் சங்கீதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகளும் உள்ளார். 2019ஆம் ஆண்டு கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட சங்கீதா பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
ஜான் கொக்கேன்: பிரபல வில்லன் நடிகரான ஜான் கொக்கேன் 2019ஆம் ஆண்டு நடிகை பூஜா ராமச்சந்திரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். நடிகை பூஜா கடந்த 2019ஆம் ஆண்டு கேரிக் என்ற தொகுப்பாளரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார்.
டி இமான்: இசையமைப்பாளர் டி இமான் தனது முதல் மனைவியை 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிறந்தார். இதனை அடுத்து சமீபத்தில் இவர்களுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது இமானின் இரண்டாவது மனைவி எமிலி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவீந்தர் சந்திரசேகர்: தயாரிப்பான ரவீந்தர் சந்திரசேகர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமி ஏற்கனவே விவாகரத்து பெற்றவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவருக்கு ஒரு மகனும் இருக்கும் நிலையில் ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.