பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி வரும் முன்னணி இயக்குனர்களில் ஒரு முக்கியமான இயக்குனர் தான் சுதா கொங்கரா இவர் சமீபத்தில் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் அந்த திரைப்படம் ஓட்டிட்டு தளத்தில் வெளியானாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்று இவருக்கு பேரும் புகழும் வாங்கி தந்தது.
மேலும் சமீபத்தில் தான் இவரது மகளின் திருமணம் நடைபெற்றது என்பது பலருக்கும் தெரியும் அந்த வகையில் அந்தத் திருமணத்தில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜி.வி பிரகாஷ் போன்ற பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படங்களில் ஒரு சில புகைப்படத்தில் சூர்யா மற்றும் ஜிவி பிரகாஷ் கார்த்தி என மூன்று பேரும் மணப் பெண்ணுடன் இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.