சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜெய்லர் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் அல்லது தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸ் செய்ய பட குழுவினர்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த நேரத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் மற்றும் கார்த்திகேயன் ஜப்பான் ஆகிய படங்களும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தற்பொழுது மாமனார் மாப்பிள்ளைக்கு நடுவில் கார்த்தியின் படமும் களமிறங்கி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெய்லர் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் நெல்சன் திலிப் குமார் இயக்க மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு லிட் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் கடந்த வார படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்ற நிலையில் அந்த ரஜினி அவர்களும் கலந்துக் கொண்டார். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என பட குழுவினருக்கு அறிவித்த நிலையில் தற்போது ஷூட்டிங் முடியாத காரணத்தினால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்புகளை முடித்துவிட்டு போஸ்ட் ப்ரோமோஷன் பட குழுமர்கள் ஈடுபட இருக்கும் நிலையில் சுதந்திர தினத்தன்று வெளியாக வாய்ப்பிருக்கிறது.
அப்படி முடியாவிட்டால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேசில் களம் இறங்க இருக்கிறது. அதேபோல் தனுஷின் கேப்டன் மில்லர் படம் கண்டிப்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரிலீஸ்சாக இருக்கிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கும் நிலையில் இவர்களை தொடர்ந்து சந்தீப் கிஷன், சிவராஜ் குமார் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இவ்வாறு கண்டிப்பாக மாமனார் மாப்பிள்ளை படங்கள் போட்டி போட இருக்கும் நிலையில் இதற்கிடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ராஜ் முருகன் இயக்கம் இந்த படத்தின் சூட்டிங் சமீப காலங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.