கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் மாமனார், மருமகன் என போட்டி போட்டுக் கொண்டு ரொமான்டிக்காக நடித்த 4 நடிகைகள்.! கிளாமரில் பின்னி படலெடுத்த ஸ்ரேயா..

sreya
sreya

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் 40 வருடங்களுக்கு மேலாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த் தற்போது அவருடைய நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்தின் மாப்பிள்ளை நடிகர் தனுஷ் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

தற்பொழுது கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் மாமனார் மருமகனான  ரஜினி தனுசுடன் மாறி மாறி ரொமான்ஸ் செய்து நடித்த 4 நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

ஸ்ரேயா: நடிகை ஸ்ரேயா தனுஷ் உடன் இணைந்து திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து குட்டி படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார் ஆனால் ரஜினி அவர்களுடன் சிவாஜி படத்தில் செம கிளாமராக நடித்திருப்பார்.

தமன்னா: நடிகை தமன்னா தனுஷ் உடன் இணைந்து வேங்கை உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் இதனை அடுத்து தற்பொழுது ரஜினியுடன் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அப்படி இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் காவாலா பாடலுக்கு செம கிளாமராக குத்தாட்டம் போட்டு இருப்பார்.

நயன்தாரா: ரஜினிகாந்த் அவர்களுடன் சந்திரமுகி, குசேலன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனை அடுத்து தனுஷ் உடன் இணைந்து யாரடி நீ மோகினி படத்தில் மிகவும் ரொமான்டிக்காக நடித்திருப்பார்.

திரிஷா: நடிகை திரிஷா தனுஷ் உடன் இணைந்து கொடி திரைப்படத்தில் நடித்திருப்பார் இதனை அடுத்து ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.