காலம் காலமாக திரை உலகின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகைகள் கூட போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை அள்ளி வீசி வருகின்றனர். ஏற்கனவே லட்சக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கும் இவர் இவ்வாறு செய்வது பலருக்கும் தற்போது ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் தென்னிந்திய திரை உலகில் பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் நடிகை சமந்தாவும் இந்த லிஸ்டில் வந்துள்ளதால் ரசிகர்கள் ரசிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்தாலும் ஒரு வகையில் அவர்களுக்கு சந்தோஷத்தையும் தந்து வருகிறது.
இவை ஒரு இருக்க மறுபக்கம் இவர் தமிழில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதுபோல தெலுங்கில் சகுந்தலா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதுதான் இப்படி என்றால் தற்போது வெப்சீரிஸ் பக்கங்களிலும் இவருக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இவ்வாறு இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா சினிமா உலகில் மேல் நோக்கி இன்னும் செல்ல தனது உடம்பை ஃபிட் ஆக்கிக்கொண்டு வருகிறார் அந்த வகையில் தற்போது சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார் நடிகை சமந்தா.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவை சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள் ஒரு பக்கம் புகைப்படம் வெளியிடுவது மற்றும் உடம்பை ஃபிட்டாக வைத்துள்ளது சினிமாவில் நீங்கள் மேல்நோக்கி செல்வதற்கான அடித்தளமாக இது உங்களுக்கு உதவுகிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது என கூறி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை சமந்தா சிக்ஸ் பேக் வைத்திருக்கும் அந்த புகைப்படம் இதோ.