டாக்டர் பட்டம் பெற்றாலும் சினிமாவில் நடித்து பிரபலமான நடிகர், நடிகைகள்.! அட, இந்த நடிகையும் டாக்டரா…

sai-pallavi
sai-pallavi

தமிழ் திரைவுலகில் ஏராளமான நட்சத்திரங்கள் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு மருத்துவராக பணியாற்றாமல் சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்த காரணத்தினால் நடிக்க ஆரம்பித்தவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் மருத்துவம் படிப்பை முடித்துவிட்டு முன்னணி நடிகர் நடிகைகளாக கலக்கி வரும் பிரபலங்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.

1. அஜ்மல் அமீர்: தமிழ் மற்றும் மலையாள மொழியில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜ்மல் அமீர் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான பிப்ரவரி 14 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து தற்பொழுது வரையிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

2. சாய் பல்லவி: இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார் இதன் மூலம் தனது நடனத் திறமையை வெளிப்படுத்திய இவருக்கு கடந்த 2008ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த தாம் தூம் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்திக் கொண்டு சாய்பல்லவி தற்போது தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

3: பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன்: நடிகராக சினிமாவிற்கு அறிமுகமான இவர் தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டுள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படத்திற்கு முன்பு லத்திகா என்னும் படத்தினை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. சேதுராமன்: இவர் தனது தொழிலை விடாமல் மருத்துவராக பணியாற்றிக் கொண்டே சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார். அப்படி இவர் 2013ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு திடீரென உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் காலமானது தமிழ் திரை உலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது.

5. பாரத் ரெட்டி: ஹீரோவாகவும், வில்லனாகவும், முக்கிய கேரக்டரிலும் நடித்து வரும் பாரதி ரெட்டி மருத்துவராக பட்டம் என்ற பிறகு நடிப்பில் ஆர்வம் இருந்த காரணத்தினால் சினிமா துறையில் பணியாற்ற தொடங்கினார் இவர் நடிகர் சந்தானத்தின் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

6. வித்யா பிரதீப்: சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கி வரும் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த சைவம் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இதற்கு முன்பு இவர் சில சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் கண் மருத்துவர் ஆவார்.

7. அதிதி சங்கர்: கடந்த 2022ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்த புதுவரவு அதிதி சங்கர் ஆவார். இவர் இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதால் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

8. பிரணிதா: தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துவரும் இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான போக்கிரி திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவிற்கு அறிமுகமானார் மேலும் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

9. சௌந்தர்யா: இவர் 1992ஆம் ஆண்டு நன்னை தங்கை என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இதனை வைத்து இவருக்கு தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். இவரும் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது