கோடி கோடியாக சம்பாதித்தாலும் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வாழும் நடிகர், நடிகைகள்..!

kavin
kavin

kavin : சினிமா உலகில் ஹீரோ ஹீரோயின்னாக அறிமுகமாகும் நடிகர், நடிகைகளுக்கு ஆரம்பத்திலேயே 10 லட்சம் 20 லட்சம் சம்பளம் வாங்குகின்றனர். முதல் மூன்று படம் வெற்றி அடைந்து விட்டால் அதன் பிறகு கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்தி ஒரு கட்டத்தில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள் இப்படி அதிகமாக சம்பளம் வாங்கினாலும் ஒரு சில நடிகர், நடிகைகள் சொந்த வீடு கூட இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றி விலாவாரியாக பார்ப்போம்..

1. கவின் : சின்னத்திரையில் பிரபலமானவர் கவின். முதலில் கனா காணும் காலம், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த இவர் வெள்ளித்திரையில் நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார். அதன்பிறகு லிப்ட், டாடா பண்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து தற்பொழுது ஊர் குருவி மற்றும் பெயரிடப்படாத ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் தற்போது ஒரு படத்திற்கு கோடிகணக்கில் சம்பளம் வாங்கி வரும் கவின். இன்னும் சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் தான் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. கஞ்சா கருப்பு : ஜீவா நடிப்பில் வெளியான ராம் படத்தில் காமெடி ரோலில் நடித்து அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. அதனை தொடர்ந்து கிராமத்து கதைய அம்சம்யுள்ள படங்களில் நடித்தார். பருத்தி வீரன், தாமிரபரணி போன்ற படங்களில் காமெடியனாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் இவர் ஒரு டாக்டர் பண்ணை திருமணம் செய்து கொண்டு பெரிய ஆளாக்கில் செட்டில் ஆனார் ஒரு கட்டத்தில் படங்களை தயாரிக்க போவதாக சொல்லி நிறைய கடன் வாங்கினார். இதனால் தற்பொழுது தனது சொந்த வீட்டையே இழந்து  வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

3. மாரிமுத்து : அஜித் நடிப்பில் உருவான வாலி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டார் இப்படிப்பட்ட  மாரிமுத்து வெள்ளித்திரையும் தாண்டி சின்னத்திரையிலும் அசத்தி வருகிறார் அந்த வகையில் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். இப்படி நான்கு பக்கமும் காசுகளை அள்ளிக் குவிக்கும் மாரிமுத்து தற்போது வாடகை வீட்டில் தான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. ஷகிலா :

மலையாள நடிகையான ஷகிலா அங்கு  மோகன்லால், மம்முட்டி  போன்ற டாப் நடிகர்களின் படங்கள் நடித்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினார். இதனால் வாழ்க்கை அனுபவித்து வாழ்ந்து வந்த ஷகிலாவை உறவினர்கள் ஏமாற்றி விட்டார்கள் அதிகம் காசு வைத்திருந்தால் வருமான வரித்துறை ரைய்டு வந்துவிடும் எனக் கூறிய அனைத்து காசையும் வாங்கிவிட்டு கடைசியில் கைநீட்டி விட்டார்கள் இதனால் தற்பொழுது சகிலா சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

5. பார்த்திபன் : வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகவும் கெட்டிக்காரர் பார்த்திபன் 30 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் இவர் தற்பொழுது தானே படங்களை இயக்கி நடித்து வருகிறார். அப்படிஇவர் கடைசியாக எடுத்த இரவின் நிழல் படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது இதனால் அவர் கோடிக்கணக்கில் காசு பார்த்து இருந்தாலும் தற்போது வரை வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்.