நேற்று சட்டசபை தேர்தலை முன்னிட்டு திறைப்பிரபலங்கள் விடியற்காலையிலேயே தங்களது ஓட்டினை வாக்குச்சாவடியில் பதிவிட்டு சென்றனர். மேலும் கூட்ட நெரிசல் காரணமாகவும் கோடை வெயிலை தவிர்ப்பதற்காகவும் காலையிலேயே வந்து வாக்குகளை பதிவிட்டு சென்றுள்ளனர்.
அந்தவகையில் தளபதி விஜய் நீலங்கரைக்கு சைக்கிளிலேயே வந்து ஓட்டு போட்டு ரசிகர்களை கவர்ந்தார். அவரைதொடர்ந்து சியான் விக்ரம் நடந்தே வந்து ஓட்டு போட்டு சென்றார்.
மேலும் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் விடியல் காலையிலேயே திருவான்மையூர் வரிசையில் நின்று ஓட்டினை பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர்களான சூர்யா, கார்த்தி, சிவகுமார், ரஜினிகாந்த், கமல் போன்ற பிரபலங்கள் காலையிலேயே தங்களது ஓட்டினை பதிவிட்டனர்.
மேலும் நடிகர் சிம்பு தியாகராயர் நகரில் செம ஸ்டைலாக வந்து ஓட்டினை பதிவிட்டுள்ளார். அவரைப்போல நடிகை திரிஷாவும் கருப்பு நிற உடையில் மிக அழகாக வந்த ஆழ்வார்பேட்டையில் வாக்கினை செலுத்த உள்ளார்.
இவர்களை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா கீழ்ப்பாக்கத்தில் தனது ஓட்டினை பதிவிட்டுள்ளார்.நடிகை நிக்கி கல்ராணி, சினேகா போன்றோரும் ரொம்ப ஸ்டைலாக வந்து தனது வாக்கினை செலுத்திவிட்டு சென்றுள்ளனர்.