தற்பொழுது தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் தான் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என்றால் தற்பொழுது யோகி பாபு தான் அனைவர் மனதிலும் வருகிறார் இவருடைய காமெடி, பாடி லாங்குவேஜ் போன்றவை ரசிகர்கள் மனதை அதிக அளவில் கவர்ந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இவர் அமீர் நடிப்பில் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் வெளிவந்த யோகி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக யோகி பாபு அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படங்களில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.
இவ்வாறு காமெடி நடிகராக கலக்கி வந்த யோகி பாபு மண்டேலா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தார் இவ்வாறு தற்பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் ஹீரோவாகவும், இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களும் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இவருடைய நடிப்பில் பிப்ரவரி 3ஆம் தேதி அன்று பொம்மை நாயகி என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. எனவே இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது யோகி பாபு தன்னுடைய 200வது படம் குறித்த அப்டேட்டை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்தப் படத்திற்கு மெடிக்கல் மிராக்கள் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது அதில் யோகி பாபுவை சுற்றி கடிகாரம், முதலுதவி பெட்டி, ஊசி, காலண்டர், கத்தி என ஆபரேஷனுக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை இருக்கின்றது. எனவே இதனை பார்க்கும் பொழுது இதுவரையிலும் இல்லாத அளவிற்கு வித்தியாசமான படத்தில் யோகி பாபு நடிக்க இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
எனவே இந்த தகவல் ரசிகர்களின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்க இயக்குனர் ஜான்சன் இயக்க இருக்கிறார் மேலும் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக மெடிக்கல் மிராக்கள் படம் அமைய இருக்கிறது இந்த படம் யோகி பாபுவின் 200வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.