நான்காவது முறையாக அதே கூட்டணியில் யோகி பாபு.! யார் திரைப்படம் தெரியுமா

yoki bhapu 1
yoki bhapu 1

வடிவேலுக்கு அடுத்ததாக தனது எதார்த்த காமெடி திறமையினாலும் தனது சிறந்த நடிப்பு திறமையினாலும்  ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகர் யோகிபாபு. இவர் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகளின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கூட இவர் ஹீரோவாக நடித்திருந்த மண்டேலா திரைப்படம் தொலைக்காட்சிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு தல அஜித்துடன் சேர்ந்து வலிமை திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இவ்வாறு சினிமாவில் வளர்ந்துள்ள இவர் நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு அடுத்ததாக யோகிபாபு தான் ரசிகர்கள் மத்தியிலும் ,சம்பளம் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது யோகி பாபு ஒரு நாளைக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு 10 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.

அதோடு தொடர்ந்து நடித்து வரும் இவர் தற்போது மீண்டும் இளம் நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க உள்ளார்.து. ப. சரவணன் இயக்கிவரும் விஷாலின் 31-வது திரைப்படத்தில் தான் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இத்திரைப்படத்தில் விஷாலின் நெருங்கிய நண்பர்களாக ரமணா மற்றும் நந்தா இருவரும்  நடிக்க உள்ளார்கள்.

எனவே தற்பொழுது யோகிபாபு இத்திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதால் விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக  ஹைதராபாத் செல்ல உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. யோகி பாபு இதற்கு முன்னரே பட்டத்து யானை, அயோக்யா, ஆக்சன் உள்ளிட்ட திரைப்படங்களில் விஷாலுடன் இணைந்து பணியாற்றியவர் ஆவார்.