தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் யோகிபாபு. இவ்வாறு பிரபலமான நமது யோகி பாபு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.
அந்தவகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டேய் மாமா, கூர்கா போன்ற பல்வேறு திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது.
அந்த வகையில் தற்போது இவர் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்துகொண்டிருக்கிறார். பொதுவாக சந்தானம் வடிவேலு போன்ற முன்னணி காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்த பிறகு யாரும் காமெடி கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கவில்லை.
ஆனால் இவர்களுடைய செயலுக்கு மாறாக நடிகர் யோகி பாபு தற்போதுவரை காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார் இந்நிலையில் பிரபல முன்னணி இயக்குனரான மலையாள திரைப்பட இயக்குனர் ரஜேஷ் மிதிலா என்பவர் இயக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
இவ்வாறு நமது இயக்குனரே இந்த திரைப்படத்தை இயக்கி தயாரித்து வரும் இந்த திரைப்படமானது முழுக்க முழுக்க பேண்டசி திரைப்படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கான பூஜையை கூட சமீபத்தில் பல்வேறு பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது