தமிழ் சினிமாவில் முன்னை நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் யோகி பாபு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த காலகட்டத்தில் காமெடி நடிகர்களான செந்தில், கவுண்டமணி போலவே தற்பொழுது வெளியாகும் முன்னணி நடிகர்களின் பாதி படங்களுக்கும் மேல் யோகி பாபு தான் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் இவருடைய எதார்த்த நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது இவ்வாறு தொடர்ந்து நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த இவர் தற்பொழுது கதாநாயகனாகவும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இவரின் நடிப்பில் உருவாகி வரும் மெடிக்கல் மிராக்கள், பூமர் அங்கில், பொம்மை நாயகி போன்ற திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த படங்களை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றில் இணைந்துள்ளார் அந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தையும் இவரே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக இவர் தான் நடிக்க இருக்கிறாராம்.
இந்த படத்தினை வில் அம்பு படத்தை இயக்கிய ரமேஷ் சுப்பிரமணியன் இயக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது மேலும் தற்பொழுது இந்த படத்தின் பூஜை நடைபெற்ற உள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலும் தற்பொழுது வெளியாகி உள்ளது.
சினிமாவில் படிப்படியாக உயர்ந்து தற்பொழுது முன்னணி நடிகர்கள் கூட இந்த அளவிற்கு திரைப்படங்களை கைவசம் வைத்து இருப்பதில்லை அவர்களை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு யோகி பாபு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார் மேலும் இந்த சோசியல் மீடியாவில் வைரலாக திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
— Yogi Babu (@iYogiBabu) October 3, 2022