காமெடியனாக இருந்தாலும் கல்லா கட்டி பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தை உருவாக்கிய யோகி பாபு.! முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

yogi babu
yogi babu

Yogi Babu: தமிழ் சினிமாவில் தற்பொழுது தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் யோகி பாபு. படும் பிஸியாக இருந்து வரும் இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் தற்போது இவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக விளங்கி வருபவர் தான் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து ஹீரோவாகவும் நடித்து கலக்கி வருகிறார். இவர் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில் அதில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து 2009ஆம் ஆண்டு சுப்ரமணிய சிவா இயக்கத்தில் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் ஒரு சிறிய நகைச்சுவை கேரக்டரில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதனை வைத்துக்கொண்டு பையா, கலகலப்பு, அட்டகத்தி, சென்னை எக்ஸ்பிரஸ், சூது கவ்வும், வீரம், மான் கராத்தே அரண்மனை, ஐ என அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு 2015ஆம் ஆண்டு வெளியான காக்கா முட்டை படம் தான் மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது. இதனை அடுத்து தற்போது திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும் நடித்து வரும் நிலையில் மண்டேலா என்ற படத்தில் தொழிலாளியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இப்பொழுது யோகி பாபு அனைத்து படங்களிலும் நடித்துவரும் நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் யோகி பாபு ஒரு படத்திற்கு சுமார் 3கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில் இவருடைய சொத்து மதிப்பு ரூபாய் 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.