Actor Yogi Babu: நடிகர் யோகி பாபு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். அப்படி தற்போது இவர் கைவசம் இருக்கும் படங்கள் குறித்து பார்க்கலாம். சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த யோகி பாபு பிறகு முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகர், குணச்சத்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
மேலும் சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தும் கலக்கி வரும் நிலையில் இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குண்டான தோற்றம், பரட்டை தலையுடன் பார்க்கவே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் இவரை பலரும் விமர்சனம் செய்தாலும் இதற்கிடையில் மற்றவர்களை சிரிக்க வைத்து ஃபேமஸ் ஆனார்.
இந்த நிலையில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த யோகி பாபு கோலமாவு கோகிலா படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களை பெரிதாகளவிலும் கவர்ந்தார். இந்த படத்தினை தொடர்ந்து மண்டேலா படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதற்கு தேசிய விருதும் கிடைத்தது பிறகு பொம்மை நாயகி, யானை முகத்தான், இரும்பன் என சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இவ்வாறு ஹீரோவாக நடித்திருந்தாலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவையில் நடித்து கலக்கி வருகிறார். அப்படி கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக யோகி பாபுவுக்கு ஒரு கோடி சம்பளம் வழங்கப்பட்டதாம்.
இவ்வாறு நிற்க கூட நேரமில்லாமல் நடித்து வரும் யோகி பாபு பல திரைப்படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அப்படி லக்கி மேன், ஜவான், கரு மேகங்கள் கலைகின்றன, அயலான், கங்குவார், அந்தகன், மெடிக்கல் மிராக்கிள், பூமர் அங்கில், வானவன் என பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இப்படி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளத்தில் குருவாயூர் அம்பலநடையில் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.