கன்னட திரையுலகில் அனைவராலும் அறியப்பட்ட யாஷ்,தமிழ் திரையுலகில் 2019ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் பாகம் 1 திரைப்படம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் மேலும் இந்த படத்தின் மூலம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தன் வசப்படுத்தியவர் யாஷ்.
இத்திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இப்படம் மேலும் உலக அளவிலும் நல்ல வரவேற்ப்பை பெற்ற ஒரு படமாகும். இப்படத்தில் யாஷ் மிக அதிக தாடியுடன் காட்சி அளிப்பார் அது அவருக்கு மிக மாசாக இருக்கும். இதைத்தொடர்ந்து கேஜிஎஃப் பாகம் 2 வெளியாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஏப்ரல் பதினான்காம் நாள் உலகெங்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்,மாளவிகா அவினாஷ்,சஞ்சய்தத்,பிரகாஷ் ராஜ், அச்சுத் குமார், ரவீணா டாண்டன், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ராவ் ரமேஷ்,ஜான் கொக்கேன் உள்ளிட்ட அனைவரும் இப்படத்தில் தங்களது நடிப்பை திறமையாக வெளிப்படுத்தி உள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகத்தில் வெளியிட்டுள்ளார்.இரண்டு படத்திலும் யாஷ் மிக அதிக தாடியுடன் காட்சியளிப்பார், இந்த அளவிற்கு தாடியுடன் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் ரசிகர்களிடையே புல்லரிப்பு ஏற்படுத்தியுள்ளது.கேஜிஎப் படத்திற்காக தாடியை வெகுவாக வளர்த்து வந்த யாஷ் தற்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு படத்திற்காக தனது தாடியை அகற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.