Actor Yash: கன்னட சினிமாவின் முக்கிய பிரபலமான நடிகர் யாஷ் தமிழ் இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்த வருகின்றனர். நடிகர் யாஷ் இதற்கு முன்பு பல வெற்றி திரைப்படங்களை தந்து இருந்தாலும் இவருடைய திரை வாழ்க்கை திருப்புமுனை ஏற்படுத்திய படங்கள் தான் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2.
சர்வதேச அளவில் அங்கீகாரத்தை உருவாக்கி பிளாக்பஸ்டர் ஹெட் அடித்த இந்த படத்தினை தொடர்ந்து யாஷ் தமிழ் இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கேஜிஎஃப் படத்தினை பிரசாந்த் நீல் இயக்கியிருந்த நிலையில் பான் இந்திய படமாக உருவாகி சர்வதேச அளவில் 1500 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றினை பெற்றது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு யாஷ் தனது படத்தின் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் வந்தார் எனவே தற்பொழுது வெளியாகி இருக்கும் தகவலின்படி கார்த்தியின் சர்தார் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் பி.எஸ் மித்ரன் தான் யாஷின் அடுத்த படத்தினை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்தார் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் அதே போல் யாஷ் நடிக்க இருக்கும் இந்த படமும் ரசிகர்களை பெரிதளவிலும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே யாஷ்-மித்ரன் கூட்டணி சிறப்பாக அமையும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
அதேபோல் மித்ரன் சர்தார் படத்தின் இரண்டாவது பாகத்தனையும் உருவாக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் ஆனால் தற்போது யாஷ் நடிக்க இருக்கும் படத்தினை முதலில் இயக்க இருக்கிறாராம். இந்த படம் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் உருவாக இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் விரைவில் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.