யாஷ் படம் மட்டும் தான் பிரம்மாண்டம் என நினைத்தால் அவர் வாங்கிய கார் அதைவிட பிரம்மாண்டமாக இருக்கே.! விலை மட்டும் இத்தனை கோடியா.?

yash latest car
yash latest car

ஒட்டுமொத்த சினிமா உலகில் கன்னட சினிமா மிகவும் பின் தாங்கி நிலையில் காணப்பட்டது அந்த நிலையை மாற்றியவர் தான் நடிகர் யாஷ் இவர் 2018 ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியாகிய கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தார் அதன் மூலம் கன்னட சினிமாவை உலகமே தலை நிமிரத் செய்தவர்.

கே ஜி எஃப் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அடுத்த பாகம் எப்பொழுது வரும் என ஒட்டுமொத்த ரசிகர்களையும் எதிர்பார்க்க வைத்தது அப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலம் இதன் இரண்டாம் பாகம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி கடந்த ஆண்டு வெளியாகியது.

முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படைத்தது அப்படி இருக்கும் வகையில் கேஜிஎப் மூன்றாவது பாகம் எப்பொழுது வரும் என பட குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இப்படி ஒவ்வொரு பாகத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் கேஜிஎப் பட குழு மூன்றாவது பாகத்தையும் இதே போல் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறார்கள்.

இந்த நிலையில் யாஷ் ரோவர் ரேஞ்ச் என்ற பிரமாண்ட சொகுசு காரை தற்பொழுது வாங்கியுள்ளார் இந்த காரின் விலை மட்டுமே இரண்டிலிருந்து நான்கு கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது நடிகர் யாஷ் படம் தான் பிரம்மாண்டமாக நடித்து வருகிறார் என்றால் அவர் வாங்கும் காரும் மிகவும் பிரமாண்டமாக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நடிகர் யாஷ் அந்த காரின் முன்பு தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அழகாக போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக் போட்டு வாழ்த்தி வருகிறார்கள்.