வெறும் 300 ரூபாயுடன் பெங்களூர் வந்த நடிகர் யாஷ்.! மெய்சிலிர்க்க வைக்கும் தகவல்.

yaash 1
yaash 1

சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று எதிர்பாராத அளவிற்கு வசூல் சாதனை படைத்த திரைப்படம்தான் கேஜிஎப் 2. இத்திரைப்படத்தினை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார் இவர் இயக்கிய இத்திரைப்படத்தில் யாஷ் நடித்திருந்தார் இதனை தொடர்ந்து இத்திரைப்படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸானது.

இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. எனவே இயக்குனர் மற்றும் நடிகர் தற்போது வரையிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.  இவ்வாறு இந்த திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள யாஷ் பற்றிய தகவல் ஒன்று சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்து வருகிறார்கள்.

அதில் யாஷின் உண்மையான பெயர் நவீன்குமார் கௌடா என்றும் நாடகங்களில் யாஷ் என்ற பெயரில் இவர் நடித்த பிரபலமானதால் யாஷ் என்ற பெயரே இவருக்கு பொருத்தமானதாக இருந்ததால் இதனையே வைத்து விட்டதாகவும் கூறி இருந்தார்.பிறகு மைசூரை சேர்ந்த நடிகர் சிறிய வயதில் இருந்து சூப்பர் ஸ்டார் நடிகராக வளர வேண்டும் என்று விரும்பி வந்துள்ளார்.

எனவே பள்ளிப் பருவத்திலிருந்து என்னவாக போகிறாய் என்று ஆசிரியர் கேட்டால் கூட நான் நடிகராகவேன் என்று தான் பதில் அளிப்பாராம் இந்த பதிலைக் கேட்ட மற்ற மாணவர்கள் அனைவரும் கிண்டல் செய்வார்களாம் ஆனால் கல்லூரிப் பருவத்திலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

எனவே சினிமா மீது ஆசையாக இருந்தால் பெற்றோரிடம் இதனை தெரிவித்துள்ளார். ஆனால் இதனை அவர்கள் விரும்பாததால் 300 ரூபாயுடன் மைசூரில் இருந்து பெங்களூருக்கு வந்து நாடக கம்பெனி ஒன்றில் மேக்கப் மேனாக பணியாற்ற துவங்கியுள்ளார்.பிறகு நாடக கம்பெனியில் உங்களுக்கு பெரிய படங்கள் எதுவும் கிடைக்காத தினம்தோறும் நடைபெற இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களையும் அவர் கற்றுக் கொள்கிறார்.

இந்நிலையில் இந்த நாடகத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ஏதோ ஒரு நபர் வரவில்லை எனவே அவருக்கு பதிலாக யாஷ் நடிக்கிறார்.அப்படியே பல்வேறு தடைகளை தாண்டி வந்து சினிமாவில் பல்வேறு திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருகிறார்.