80 மற்றும் 90 களில் தொடங்கி இன்றுவரையிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அங்கீகாரத்தை பெற்றிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தன்னுடைய வாழ்க்கையை ஒரு சிறு புள்ளியில் இருந்து தொடங்கிய இவர் தற்போது சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். மேலும் நடிகர் ரஜினி அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு ரஜினிக்கு வெற்றியை கொடுத்த படம் படையப்பா.
படையப்பா திரைப்படம் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய அடையாளத்தை மாற்றியது அந்த அளவிற்கு படையப்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது. இந்த நிலையில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியானது.
ஏனென்றால் ரஜினியை வைத்து அண்ணாமலை மற்றும் பாட்ஷா ஆகிய வெற்றி படங்களை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா தான் பாபா படத்தையும் இயக்கியிருந்தார். அண்ணாமலை மற்றும் படையப்பா வெற்றியின் காரணமாக பாபா படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்ததை பாபா திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பாபா திரைப்படம் வெளியான முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்று தோல்வி அடைந்தது.
இது பட குழுவினருக்கும் ரஜினிக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது பாபா திரைப்படம் வெற்றி அடையும் என்று எண்ணியிருந்த ரஜினி இந்த படம் தோல்வி அடைந்ததால் நஷ்டம் அடைந்த பணத்தை முழுவதும் ரஜினிகாந்தே ஏற்றுக்கொண்டார். இதே போல ரஜினியின் குசேலன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் தோல்வி அடைந்தது இந்த செலவையும் ரஜினியே ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ரஜினியின் அடுத்த அடுத்த திரைப்படங்கள் தொடர் தோல்வியினால் சினிமாவில் இனிமேல் நடிக்க மாட்டார் என்று எண்ணி பிரபல நடிகர் ஒருவர் பார்ட்டி வைத்து கொண்டாடி இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் ஒரு வீடியோவில் பதிவு செய்து இருக்கிறார். ஆனால் அந்த பார்ட்டி வைத்து கொண்டாடிய நடிகரின் சந்தோசம் நீண்ட நாள் நிலைக்கவில்லை.
பாபா திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு சந்திரமுகி திரைப்படம் அந்த நடிகருக்கு பதில் அடி கொடுத்தது அது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 800 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனையும் படைத்தது. சந்திரமுகி திரைப்படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்த நடிகருக்கு காலம் கொடுத்த பதிலடி என்று அந்த பத்திரிக்கையாளர் குறிப்பிட்டிருந்தார். அந்த பத்திரிக்கையாளர் கூறிய வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.