விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்துடன் நடித்தது குறித்து பேசிய மறைந்த நடிகர் விவேக்.! வைரல் நியூஸ்.

சினிமா உலகில் ஒரு சில நடிகர் நடிகைகளின் காம்பினேஷன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும் அந்த வகையில் பலருக்கு நடிகர் நடிகைகள் செட் ஆவார்கள் ஒரு சிலருக்கு காமெடியர்கள் செட் அவர்கள் அப்படித்தான் அஜித்திற்கு செட் ஆனாவர் காமெடி நடிகர் விவேக். பெரும்பாலும் அஜித் ஹிட் படங்களில் விவேக் இருப்பார். இவர்களது காம்பு எப்போதும் வெற்றி அன்றிலிருந்து இன்று வரையிலும் தமிழ் சினிமாவில்  கொடுத்துள்ளது.

இருவரும் எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான “வாலி” திரைப்படத்தின் மூலம்  ஒன்றாக பணிபுரிய ஆரம்பித்தனர் அன்று தொடங்கி விசுவாசம் திரைப்படம் வரையிலும் இவர்களுக்கு வெற்றியை மட்டுமே பரிசாக கொடுத்து உள்ளது இந்த ஜோடி.

தமிழ் சினிமாவில் விவேக்கின் மறைவு ஈடுகட்ட முடியாத ஒன்று இருந்து வருகிறது நடிகர் அஜித் நண்பன் விவேக் அவர்களின் உடலை இறுதி கட்டத்தில் வந்து பார்க்கவில்லை என்றாலும் அவரை நினைத்து தற்போது வரையிலும் கவலைப்பட்டு கொண்டிருப்பதாக அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால் அந்த அளவுக்கு சினிமாவில் சீனியராகவும், அதேசமயம் நல்ல நண்பராகவும் அஜித்திற்கு இவர் இருந்துள்ளார்.நடிகர் விவேக் கடைசியாக அஜித்துடன் இணைந்து விசுவாசம் என்ற திரைப்படத்தில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்தார்.

இந்த நிலையில் தல ரசிகர்கள் நடிகர் விவேக்குக்கு தனது இரங்கலை தெரிவிக்கும் விதமாக தல ரசிகர்கள் அவரது வீடுகளிலும் மற்றும் சாலை ஓரங்களிலும் விவேக்கின் காண ஆசையான மரக்கன்றுகள் நடும் ஆசையை தற்போது நிறைவேற்றி வருகின்றனர் இது ஒரு பக்கம் இருக்க அஜீத்துடன் கடைசியாக நடித்த விவேக் விசுவாசம் திரைப்படம் குறித்து பேசிய தகவலை தற்பொழுது பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.

விசுவாசம் திரைப்படத்தில் நடிகர் சிறுத்தை சிவா காமெடி கதாபாத்திற்கு  என்னை வந்து பார்த்து தயங்கி தயங்கி தான் நின்றார்.என்ன என்று கேட்டேன்உங்களின் ரோல் இரண்டாம் பாதியில் தான் நீங்கள் நடிக்கவே வருகிறீர்கள் உங்களை எப்படி இதில் கமெண்ட் செய்வது என்று எங்களுக்கு பயமாக இருக்கிறது என குறிப்பிட்டார்.

இந்த படத்தில் நீங்கள் அஜித் அவர்களை காமெடியாகவும் அதே சமயம் மிகவும் நக்கலாக நீங்கதான் கலாய்க கரெக்டாக இருக்கிறீர்கள் மேலும் உங்களுக்கும் அஜித் இருக்கும் நல்ல நட்பு இருக்கிறது நீங்கள் நடித்தால் சரியாக இருக்கும் என்று தான் நான் உங்களை வந்து அணிகியுள்ளேன் என கூறினார் நான் கதையை கேட்டுவிட்டு உடனே ஓகே சொன்னேன்.

தல அஜித் ஆரம்பத்திலிருந்து தற்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார் ஆனால் அவரது இடம் உயர்ந்துகொண்டே செல்கிறது விசுவாசம் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் மரியாதைக்காக அஜித்தை சார் என்று அழைத்தேன் அவர் பதிலுக்கு சொல்லுங்க ஜி நீங்க என் சீனியர் என்று அழைத்து என்னை பெருமைப்படுத்தினார்.

விசுவாசம் திரைப்படத்தில் அவருடன் நடித்தது மிகப்பெரிய அனுபவம் அது என்னால் மறக்க முடியாது ஏன குறிப்பிட்டார்.