தமிழ் திரைஉலகில் எத்தனை காமெடி நடிகர்கள் வலம் வந்தாலும் மக்களுக்கு தனது கருத்துக்களை புரியும்படியாக கூறி வலம் வந்தவர் தான் விவேக் இவர் நடித்திருந்த நிறைய திரைப்படங்களில் தனது காமெடி திறனைக் காட்டி மக்களுக்குப் புரியும் படியாக கருத்துக்களைக் கூறி இருப்பார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.
அதிலும் குறிப்பாக இவர் எந்த திரைப் படத்தில் நடித்தாலும் இயக்குனர்கள் கொடுக்கும் கதாபாத்திரத்தை அப்படியே அந்த கதாபாத்திரத்திற்கு மாறி தனது நடிப்பை இயல்பாக மக்களுக்கு காட்டி இருப்பார்.இவர் பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
இந்நிலையில் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் கொரோனா தொற்று காரணமாக கோவை(சீல்ட்) என்ற தடுப்பூசியை பலரும் போட்டுக்கொண்டார்கள் ஆனால் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடுகிறது.மேலும் நடிகர் விவேக்கும் அந்த ஊசியை போட்டுக் கொண்டார் ஆனால் அவருக்கு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவசர பிரிவு சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் விவேக் மீண்டும் எப்படியாவது திரும்பி சினிமாவில் நடிக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை வைத்திருந்தார்கள் ஆனால் அவர்களுக்கு சோகம் தரும் வகையில் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார்.
மேலும் இவரது இறப்பு குறித்து சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் இவர் 2000 முதல் 2001ம் ஆண்டு வரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் நடித்த ஒரு சில திரைப்படங்களுக்கு பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.