மீண்டும் தியேட்டரை அலற வைக்கப் போகும் நடிகர் விஷ்ணு விஷால்..! அட இந்த மெகா ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகமா..?

vishnu-vishal
vishnu-vishal

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விஷ்ணு விஷால் அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகருக்கான அந்தஸ்து இவருக்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். என்னதான் அவ்வப்போது ஒரு சில வெற்றி படங்களை கொடுத்து வந்தாலும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு  சினிமாவில் ஒரு சரியான இடம் கிடைக்கவில்லை.

நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் கட்டா குஷ்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல வேட்டையாடியது.

இந்த நிலையில் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். கடந்த ஆண்டு மனு ஆனந்த இயக்கத்தில் வெளியான எஃப் ஐ ஆர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல லாபம் பார்த்தது.

இதனை தொடர்ந்து மற்ற நடிகர்கள் ஹிட் அடித்த படங்களின் இரண்டாவது பாகத்தை எடுத்து வரும் நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் அதே ரோட்டி சென்றுள்ளார். அதாவது எஃப் ஐ ஆர் படத்தின் இரண்டாவது பாகத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டு உள்ளது இந்த நிலையில் அந்த படம் விஷ்ணு விஷால் நடிக்க இருக்கும் எஃப் ஐ ஆர் படத்தின் இரண்டாவது பாகமாக தான் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் முதல் பாகத்தை தயாரித்த விஷ்ணு விஷால் இரண்டாவது பாகத்தையும் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.