நடிகர் விஷால் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் அண்மை காலமாக நடிக்கும் திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை பெறாததால் இவரது மார்க்கெட் சரிவை சந்திக்க போவதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
அதை நன்கு உணர்ந்து கொண்ட விஷால் வெற்றியை கொடுக்க தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துதான் பார்க்கிறார் ஆனால் எதிர்பார்த்த வெற்றியை ருசிக்க தவறுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஷால் லத்தி படத்தில் நடித்துள்ளார் அதில் போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார்..
இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே நடிகர் விஷால் சுமார் 100க்கும் மேற்பட்ட வில்லன்களை அடித்து நொறுக்குவது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படம் வெகு விரைவிலேயே வெளிவர இருக்கிறது அதற்கு முன்னாடியே மற்றொரு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அந்த திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.
திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார் இந்த படத்தில் சூர்யா, ரித்து வர்மா, நிழல்கள் ரவி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கோலாகலமாக வெளியாகி உள்ளது.
மார்க் ஆண்டனி போஸ்டரில் நடிகர் விஷால் தாடி மீசையுடன் ஒரு புதிய கேட்டப்பில் இருக்கிறார் இந்த படம் விஷாலுக்கு ஒரு நல்லதொரு வெற்றி படமாக இருக்கும் என போஸ்டரை பார்த்த பலரும் சொல்லி வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் அப்படியே கைதி கெட்டப் போலவே இருப்பதாக கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த அழகிய போஸ்டரை நீங்களே பாருங்கள்..