தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஷால்.இவ்வாறு நடிகராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றது.
இதனை தொடர்ந்து துப்பறிவாளன் 2 மற்றும் எனிமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இவரின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அதனைப் பற்றிய சில தகவல்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விஷால் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தை து ப சரவணன் இயக்கத்தில் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிக்க உள்ளது.தற்பொழுது இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் முடிந்துள்ளது.
அந்த வகையில் பூஜையின் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஒருபுறமிருக்க தற்போது கொரோனா தாக்கம் ஒரு பக்கம் உலகையே அழித்து வருகிறது.இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறும் என்பது சாத்தியமா என்பது கொஞ்சம் டவுட் தான் உள்ளது.
அந்த வகையில் தற்பொழுது இத்திரைப்படத்திற்காக நடந்த பூஜையில் கூட முக்கியமான சிலர் மட்டும்தான் கலந்து கொண்டுள்ளார்கள் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.