தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஷால் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களை தந்து வருகிறார். முரட்டு சிங்கிளாக இருந்து வரும் நடிகர் விஷாலுடன் நடித்ததால் ஏராளமான நடிகைகள் கிசுகிசுப்பில் சிக்கி உள்ளனர். எனவே இதன் காரணமாக பல நடிகைகள் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க தயங்கி வருவது வழக்கமாக இருந்த வருகிறது.
இந்நிலையில் விஷாலினால் கிசுகிசுப்பில் ஏற்பட்ட நடிகைகள் குறித்து பார்க்கலாம்.
மலையாள நடிகை: தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை லட்சுமிமேனன் தமிழில் விஷால் உடன் இணைந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைக் கண்டது.
இந்த படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருந்த நிலையில் இவர்கள் காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் என கூறப்பட்டது. ஆனால் பிறகு காலங்கள் போக போக என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
வில்லி நடிகை: தமிழ் சினிமாவிற்கு வாரிசு நடிகையாக பிரபல நடிகர் சரத்குமாரின் மகளாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் வரலட்சுமி. தனது அப்பா நடிகர் சரத்குமார் என்றாலும் அவருடைய துணை இல்லாமல் தனது கடின உழைப்பினால் சினிமாவிற்கு வந்து வெற்றினை கண்டார்.
மேலும் அறிமுகமான காலகட்டத்தில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் பிறகு சில திரைப்படங்களில் வில்லி கதாபாத்திரத்திலும் நடிக்க தொடங்கினார். இவ்வாறு ஹீரோயினை விட வில்லி கேரக்டர் தான் இவருக்கு பக்காவாக இருந்தது இதன் காரணத்தினால் தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழி திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பற்றி பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் வரலட்சுமி விஷால் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது இதனைப் பற்றி வரலட்சுமி மறைமுகமாக சில நிகழ்ச்சிகளில் கூட கூறியிருந்தார். ஆனால் சில காரணங்களினால் இருவரும் பிரிந்த நிலையில் சண்டைக்கோழி 2 படத்தில் வரலட்சுமி வில்லியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.