Mark Antony Box Office: விஷால், எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றி நடைப் போட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வெளியாகி உள்ளது. விஷால், எஸ். ஜே சூர்யா ஆகியோர்கள் இணைந்து நடித்திருக்கும் மார்க் ஆண்டனி படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இவர்களுடன் செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மார்க் ஆண்டனி திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இதற்கு முன்பு இந்த படத்தின் ரிலீஸ் இருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது அதன் பிறகு தடை நீக்கப்பட்டு ஏற்கனவே முடிவு செய்தது போலவே ரிலீஸானது. மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் விஷால், எஸ்.ஜே சூர்யா செய்துள்ள காமெடியாளப்பிறைகள் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்திருக்கிறது.
மேலும் சில்க் சுமிதா வரும் காட்சிகளில் எஸ்.ஜே சூர்யா சிக்ஸர் அடித்துள்ளார். இவ்வாறு விஷால், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட இந்த படத்தின் நடித்திருக்கும் அனைவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இவ்வாறு ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி இந்த படம் முதல் நாளில் 7 முதல் 9 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில காலங்களாக விஷால் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் கலவை விமர்சனத்தை பெற்று வந்தது. ஆனால் தற்பொழுது மார்க் ஆண்டனி படத்தின் மூலம் விஷால் கம்பேக் கொடுத்துள்ளார். சுமார் 40 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் மேலும் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.