12வது முறையாக விஷாலுடன் கைகோர்த்த பிரபலம்.! நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட நடிகர்.

vishal
vishal

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விஷால் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். அத்திரைப்படத்தில் 12வது முறையாக விஷாலுடன் பிரபலம் ஒருவர் இணைந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

விஷால் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருவதால் பல பிரச்சனைகளை சந்தித்தார்.அதோடு இவரின் மீது பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் இருந்து வருகிறது.  இருந்தாலும் விஷால் அனைத்தையும் தாண்டிய தொடர்ந்து புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் லத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது இன்னும் சில காலங்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிய இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இத்திரைப்படம் நந்தா தயாரிப்பில் வினோத்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது இவர்களை தொடர்ந்து விஷாலின் மிகவும் நெருங்கிய நண்பரான ராணாவும் இத்திரைப்படம் தயாரிப்பதில் கூட்டணியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தற்பொழுது இத்திரைப்படத்தின் இசை அமைப்பாளர் பற்றிய அற்புதமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது லத்தி திரைப்படத்தில் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாதான்  12வது முறையாக விஷாலின் திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் என்று பெருமையாக விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே விஷாலுக்கு சண்டக்கோழி, திமிரு,தீராத விளையாட்டு பிள்ளை,சமர், தாமரபரணி, அவன் இவன்,சண்ட கோழி 2, வீரமே வாகை சூடும் உள்ளிட்ட 11 திரைப்படங்களில் இசையமைத்த இவன் சங்கர் ராஜா தற்போது 12வது முறையாக லத்தி திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.