நடிகர் விஷால் எடுத்த உடனேயே ஆக்சன் படங்களில் நடித்து தன்னை மிகப் பெரிய ஒரு ஹீரோவாக வெளிகாட்டிக்கொண்டார் ஆனால் அண்மைக்காலமாக இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஆக்ஷன் திரைப்படங்களாக இருந்தாலும் அந்த படங்கள் வெற்றியை ருசிக்க வில்லை இதனால் தற்போது வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்.
இவர் கடைசியாக நடித்த எனிமி, வீரமே வாகை சூடும் போன்ற படங்களும் தோல்வி படங்களாக அமைந்தன இதிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ள தற்பொழுது வினோத்குமார் உடன் கைகோர்த்து விஷால் லத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் முழுக்க முழுக்க ஒரு போலீசாக விஷால் நடித்துள்ளார் படத்தில் அவருடன் கைகோர்த்து சுனைனா ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மற்றபடி யார் யார் நடிக்கிறார்கள் என்பது சரியாக தெரியவில்லை. இந்த படத்தில் அதிக சண்டை காட்சிகள் இருப்பதாக தெரிய வருகிறது இந்த படத்திற்கு சண்டை மாஸ்டராக பீட்டர் என்பவர் காட்சிகளை படமாக எழுது வருகிறார்.
ஒரு காட்டுக்குள் நிறைய வில்லன்களைத் வைத்து நடிகர் விஷால் சண்டை போடுவது போல ஒரு காட்சி இந்த காட்சி மட்டுமே சுமார் 65 நாட்களில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த காட்சியில் நடித்தவர்கள் சரியான உறக்கம் உணவு இன்றி படத்தில் நடித்து வருகின்றனர் அது போல விஷாலும் ரொம்ப மெனக்கெட்டு நடித்துள்ளாராம்.
அதுவும் 100 பேருடன் ஒரு சண்டைக் காட்சி நடப்பதாக கூறப்படுகிறது இதில் நடித்து கொண்டிருக்கும் பொழுது நடிகர் விஷால் மயங்கி விழுந்துள்ளார் என்னவென்று பார்த்தால் அவருக்கு நீர்ச்சத்து குறைவாக இருந்த காரணத்தினால் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. தற்போது அதில் இருந்து குணமாகி மீண்டும் படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.