அண்ணாத்த திரைப்படத்தால் தியேட்டரில் ஈ ஓட்டும் நடிகர் விஷால்..! என்னடா எனிமி படத்திற்கு வந்த சோதனை..!

vishaal
vishaal

பொதுவாக பண்டிகை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம் தான் அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு பல்வேறு திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ளது அந்த வகையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம்தான் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம்.

இவ்வாறு இந்த திரைப்படத்திற்கு போட்டியாக பல்வேறு திரைப்படங்கள் இருந்த நிலையில் தற்போது அந்த திரைப்படங்கள் அனைத்துமே பின்வாங்கி உள்ளது அதில் தல அஜித்தின் வலிமை மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஆகியவை ரிலீஸ் தேதி மாற்றம் செய்துள்ளார்கள்

அதேபோல சிம்பு நடிப்பில் உருவான வாலு திரைப்படம் கூட தற்போது நவம்பர் 25ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையில் போட்டி போடப் போகும் திரைப்படங்கள் என்னவென்றால் ரஜினியின் அண்ணாத்த மற்றும் ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் உருவான எனிமி

இந்நிலையில் இந்த இரண்டு திரைப்படத்தையும் பார்ப்பதற்கு டிக்கெட்டுகள் ஆன்லைனில் புக் செய்து வருகிறார்கள் அந்த வகையில் தற்போதைய நிலை என்னவென்றால் அண்ணாத படத்திற்கு டிக்கெட் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது ஆனால் எனிமி திரைப்படத்திற்கு இதுவரை ஒரு ஷோவில் 20 டிக்கெட் கூட புக் ஆகவில்லை.

annaththa-001
annaththa-001

இதனால் எனிமி திரைப்படத்தை எடுத்த தியேட்டர் உரிமையாளர்கள் மிகப்பெரிய அச்சத்தில் உள்ளார்கள். பொதுவாக பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்தை திரையில் பார்க்க ஆசைப்படுவார்கள் இந்நிலையில் அவருடைய திரைப்படத்தின் டிக்கெட் கிடைக்காத நிலையில் இந்த எனிமி திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் செல்ல வாய்ப்புகள் உள்ளன.

enimi-1
enimi-1

இப்படிப்பட்ட நிலைமையில் நடிகர் விஷால் தன்னுடைய திரைப்படத்தை அண்ணாத்த படத்திற்கு முன்பாகவே வெளியிட்டு இருக்கலாம் இப்படி அவருக்கு போட்டியாக வெளியிட்டது எப்படி இவருக்கு சாதகமாக அமையும்.