விஷாலின் 32 வது படத்தின் டைட்டிலே வேற மாதிரி இருக்கு.? ஹீரோயின் யார் தெரியுமா.? வெளியான தகவல்.

vishal
vishal

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் விஷால் இவர் 2004 ஆம் ஆண்டு வெளியான “செல்லமே” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து சிறப்பம்சம் உள்ள படங்களை தொடர்ந்து நடித்ததால் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கொண்டே வந்தார் இதன் மூலமாக தனது பெயரை பட்டி தொட்டி ஏங்கும் நிலைநாட்டி கொண்டார்.

அந்த வகையில் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, ஆம்பள, துப்பரிவாளன், இரும்புதிரை, சக்ரா, அவன் இவன் போன்ற அனைத்துமே சூப்பர் ஹிட்டு தான். ஆனால் சமீப காலமாக கூறி சில படங்கள் பெரும் தோல்வியை சந்தித்ததால் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் கொடுத்து மீண்டும் தான் யார் என்பதை நிரூபிக்க ரெடியாக இருக்கிறார் விஷால்.

இவரது கைவசம் எனிமி, வீரமே வாகை சூடும் போன்ற புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். எனிமி திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது. பல டாப் நடிகர்கள் படங்கள் இறங்குவதால் விஷால் இந்த தடவைவெற்றியை கொடுத்த ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சினிமா உலகில் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பாக நடிகர் அர்ஜுன் உடன் வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷாலுக்கு படத்தின் கதையை நன்கு புரிந்து கொண்ட படத்தை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம் அதனால்தான் குறைந்த திரைப் படங்களில் நடித்தாலும் அதிக வெற்றி படங்களை கொடுத்த லிஸ்டில் விஷால் இருக்கிறார். நல்ல அனுபவம் இருக்கிறது. தற்போது தனது 32வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த திரைப்படத்திற்கு தற்பொழுது லத்தி சார்ஜ் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனேனா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தை வினோத்குமார் என்ற புதிய இயக்குனர் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.