அன்னைக்கு வாய் கிழியப் பேசியதெல்லாம் பொய்யா..? விஷாலின் வாக்குறுதியால் காண்டான ரசிகர்கள்..!

vishaal-1
vishaal-1

தென்னிந்திய நடிகர் சங்கத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு நடிகர் என்றால் அது ராதாரவி மற்றும் சரத்குமார் ஆகிய இருவரையும் சொல்லலாம் ஏனெனில் இவர்கள் இருவரும்தான் நடிகர் சங்க தலைவராக இருந்தார்கள் பின்னர் சரத்குமாரை தேர்தலில் வென்று விஷால் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றார்.

இவ்வாறு நடிகர் விஷால் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்தினால் நடிகர் சங்கத்திற்காக கட்டிடம் கட்டுவோம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தொழிலாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம் என பல்வேறு வாக்குறுதிகளை நடிகர் சங்க தேர்தலின் போது வெளியிட்டார்.

பொதுவாக சட்டமன்ற தேர்தலில் வெளியிடும் வாக்குறுதிகள் காற்றில் எழுதி வைத்தது போல் மறைந்து போவது வழக்கம் தான் ஆனால் தற்போது விஷாலும் இதையே செய்துள்ளார். அந்த வகையில் இவர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நடிகர் சங்கத்தின் கட்டடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் விழா மட்டுமே நடைபெற்றது.

அதன்பிறகு எந்த ஒரு அடுத்தகட்ட நடவடிக்கையையும் எடுக்காமல் நடிகர் விஷால் அதை கிடப்பில் போட்டுவிட்டார்.  அதுமட்டுமில்லாமல் தமிழக நடிகர்களை ஒரு பெண் என்று அவர் கூறியவாக்கு உறுதியானது பொய் ஆகிவிட்டன.

இந்நிலையில் நடிகர் விஷால் நடிக்கவிருக்கும் தன்னுடைய புதிய படத்திற்காக நடிகர்கள் தேவை என விளம்பரம் செய்துள்ளார்கள்.  இவ்வாறு வெளியிட்ட விளம்பரத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் ஹைதராபாத்தை சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் நடிகர் சங்க தேர்தலின்போது தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன் என சொல்லிவிட்டு தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் தருவோம் என்று கூறியது எந்த விதத்தில் நியாயம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

vishaal-1
vishaal-1