ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் நடித்திருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால் இவரை தமிழ் திரை உலகில் ஆக்சன் ஹீரோவாக கருதப்படுகிறார்கள். ஏனெனில் இவர் நடிக்கும் திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல் இருக்கவே இருக்காது.
அந்த வகையில் மிக அதிரடியான சண்டை காட்சிகளுக்கும் பஞ்ச் டயலாக்குகளுக்கும் பஞ்சமே இருக்காது. இதற்காகவே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் திரண்டு விட்டார்கள் ஆனால் சமீபத்தில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் எதுவும் சொல்லும்படி ஹிட் கொடுக்கவில்லை.
இந்நிலையில் எப்படியாவது ஒரு ஹிட்டான திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என அயராது போராடி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய நண்பர் ஆர்யாவுடன் இணைந்து எனிமி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தற்போது வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்க உள்ளாராம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் விஷாலின் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் இத் திரைப்படத்தின் படப்பிடிப்பை மிக விரைவாக முடித்து வெளியிட வேண்டும் என பல உறவினர்கள் திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்நிலையில் விஷாலின் முப்பத்தி இரண்டாவது திரைப்படமும் பூஜைக்கு வந்துள்ளது. இத்திரைப்படத்தை இயக்குனர் வினோத் குமார் அவர்கள் தான் இயக்கவுள்ளார் மேலும் திரைப்படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் விஷாலின் நெருங்கிய நண்பரான ரமணா மற்றும் நந்தா ஆகிய இருவரும் தான் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்களாம்.