அட இந்த காரணத்துக்காக 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தை தூக்கி எறிந்தாரா சியான் விக்ரம்.!!

vikram
vikram

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சியான் விக்ரம். இவரின் நடிப்பு மற்றும் ஸ்டெய்லுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சியான் விக்ரம் சொன்ன வார்த்தையைக் படக்குழுவினர்கள்  காப்பாற்றததால் கடுப்பாகி 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கிவரும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை தூக்கி எறிந்து விட்டாராம்.

சில மாதங்களாகவே இணையதளத்தில் சியான் விக்ரமை படக்குழுவினர்கள் மாறிமாறி டார்ச்சர் செய்கிறார்கள் என்று தகவல் வெளியானது.  அந்த வகையில் கோப்ரா படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது அப்படத்தின் இயக்குனர் விக்ரமை ஆப்செட் செய்வதுபோல் ஏதோ செய்துள்ளார் என்ற தகவலும் வெளிவந்தது.

இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் மாவீரர் கருணா திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இப்படம் 300 கோடி பட்ஜெட்டில் சில வருடங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சியான் விக்ரம்  சில காலங்களாக இப்படத்தில் நடிப்பது போன்ற அப்டேட்கள் எதுவும் வெளிவரவில்லை.

பிறகு சில நாட்களுக்குப் பிறகு இவர் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. மாவீரர் கர்ணா பட குழுவினர் நினைத்த நேரத்திற்கு பட ஷூட்டிங்கிற்காக விக்ரமை அழைத்ததால் கடுப்பாகி இந்தப் படத்தில் நான் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

இந்நிலையில் படக்குழுவினர்கள் தற்போது பாலிவுட்டில் இருக்கும் நடிகர்களை வைத்து இப்படத்தை இயக்க உள்ளார்களாம். மாவீரர் கர்ணா திரைப்படம் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம்,இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது. இது சியான் விக்ரமின் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக அமைந்துவிட்டது.